4 நாட்களில் லியோ ஜெயிலர் மொத்த வசூலை நெருங்கிய கல்கி.. அசால்டாக தொடப்போகும் 1000 கோடி லாபம்

Prabhas: ஒரு காலத்தில் படங்கள் பார்ப்பது கதை நன்றாக இருக்கிறது. நடிப்பு பார்க்க அட்டகாசமாக இருக்கிறது என்று வியக்க வைக்கும் அளவிற்கு எக்கச்சக்கமான எதார்த்தங்கள் இருக்கும். ஆனால் இப்போதைய படங்கள் ஆரம்பிக்கும் பொழுதே பிரம்மாண்டம் என்கிற பெயரில் கோடிக்கணக்கில் பணத்தை செலவு பண்ணி அதிநவீன டெக்னாலஜியை பயன்படுத்தி வசூலில் மட்டும் லாபம் பார்க்க வேண்டும் என்ற நினைப்பில் படத்தை எடுத்து வருகிறார்கள்.

அதாவது பிரம்மாண்டம் என்றால் அதிக செலவு செய்யணும் அதற்கேற்ற மாதிரி ஆயிரம் கணக்கில் லாபம் பெற வேண்டும் என்பதுதான். அந்த வகையில் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த கல்கி திரைப்படம் உலக அளவில் உள்ள அனைத்து திரையரங்களிலும் வெற்றி பெற்று வருகிறது. இப்படம் வெளிவந்த முதல் நாளிலேயே நல்ல விமர்சனங்களையும் வசூலையும் பெற்றுவிட்டது.

கல்கி அவதாரம் எடுத்த பிரபாஸுக்கு கிடைத்த வெற்றி

அதன் படி கல்கி படம் வெளியாகி முதல் நாளிலேயே உலகம் முழுவதிலும் 191 கோடியை வசூலித்திருக்கிறது. இந்தியாவில் மட்டும் ஹிந்தி பதிப்பில் 115 கோடியை தாண்டி இருக்கிறது. அந்த வகையில் இரண்டாவது நாளாக 60 கோடியே தாண்டிவிட்டது. இதனைத் தொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை சேர்த்து உலக அளவில் மொத்தமாக 4 நாட்களில் 555 கோடி வசூலை தாண்டி விட்டது.

இதை பார்க்கும் பொழுது சமீபத்தில் வெளிவந்த லியோ மற்றும் ஜெயிலர் படத்தின் மொத்த வசூலை கல்கி படம் 4 நாட்களில் நெருங்கி விட்டது என்றே சொல்லலாம். இதுல வேற ரஜினி விஜய் இரண்டு பேரும் நான் தான் பெருசு என்று போட்டி போட்டுக் கொண்டு வருகிறார்கள். இவர்களுக்கு இடையில் கமுக்கமாக புகுந்து வசூல் ரீதியாக நான் தான் ஆட்ட நாயகன் என்று நிரூபித்துக் காட்டிவிட்டார் பிரபாஸ் .

இந்த வசூல் உலகளவில் இருந்தாலும் வெளிவந்த நான்கு நாட்களிலேயே இப்படி ஒரு லாபமா என்று தயாரிப்பாளர்களை ஆச்சரியப்படும் அளவிற்கு வெற்றி பெற்றிருக்கிறது. அந்த வகையில் இந்த வார இறுதிக்குள் அசால்ட்டாக 1000 கோடி வசூலை தொட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் நேற்று வரை இப்படம் அனைத்து திரையரங்களிலும் ஹவுஸ் ஃபுல்லாக இருந்திருக்கிறது.

இதற்கு பிரபாஸ் என்னதான் ஒரு காரணமாக இருந்தாலும், அமுதாபச்சனின் சாகாவரம் பெற்ற அஸ்வத்தாமா கேரக்டரும், கடைசி இரண்டு நிமிடங்களில் வந்தாலும் கிங் என்று சொல்லும் அளவிற்கு கமலின் சுப்ரீம் யாஸ்கின் கேரக்டரும் சேர்ந்து மக்களை வியப்பில் ஆழ்த்திவிட்டது. அந்த வகையில் நிச்சயமாக ஆயிரம் கோடி லாபத்தையும் தாண்டி ஆர்ஆர்ஆர் படத்தின் மொத்த வசூலான 1387 கோடி லாபத்தையும் தாண்டி ஜெயித்து விடும்.

இப்படி ஒரு சாதனைக்காக தான் பிரபாஸ் நடித்தால் இந்த மாதிரி ஒரு பிரம்மாண்டமான படத்தில் மட்டும் நடிப்பேன் என்று அதிக அளவில் ரிஸ்க் எடுத்து தொடர்ந்து நடித்துக் கொண்டு வருகிறார். அப்படி அவர் நடித்ததற்கு பலனாக கல்கி படம் மாபெரும் வெற்றியை பார்த்து வருகிறது.

கல்கி படத்தின் அப்டேட்

Next Story

- Advertisement -