திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

விஜய்யுடன் கர்ஜிக்க மட்டும் 15 கோடியா.? தலை சுற்ற வைக்கும் லோகேஷின் மாஸ்டர் பிளான்

மாஸ்டர் படத்தை தொடர்ந்து லோகேஷ், விஜய் கூட்டணியில் உருவாகி வரும் லியோ படத்தின் படப்பிடிப்பு மும்மரமாக நடந்து வருகிறது. மே மாதத்திற்குள் லியோ படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடிக்க லோகேஷ் திட்டம் தீட்டி உள்ளார். மேலும் விஜய்யின் பிறந்த நாளான ஜூன் மாதம் லியோ படத்தை குறித்து முக்கிய அப்டேட் வெளியாக உள்ளது.

இந்நிலையில் லியோ படத்தில் திரிஷா, கௌதம் மேனன், மிஷ்கின், அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான் போன்ற பல பிரபலங்கள் நடிக்கிறார்கள். இதில் நடிக்கும் முக்கால்வாசி நபர்களை தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. மேலும் சிலரின் பெயர் அரசல் புரசலாக வெளியாகி உள்ளது.

Also Read : எத்தனை தடவை டிவியில் போட்டாலும் சலிக்காத 5 படங்கள்.. விஜய்க்கு திருப்புமுனை ஏற்படுத்திய 90ஸ் கிட்ஸ் படம்

அதன்படி பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இடம்பெற்ற ஜனனி லியோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம். அவருடைய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாக அவரே தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருந்தார். இப்போது விஜய்க்கு அடுத்தபடியாக லியோ படத்தில் கர்ஜிக்க போகிறதாம் சிங்கம்.

லியோ என்றாலே சிம்ம ராசி என்று அர்த்தம். அப்படி சிம்ம ராசியின் விலங்கான சிங்கம் லியோ படத்தில் இடம் பெறுகிறது. இதனால் தான் சூசகமாக லியோ என்று லோகேஷ் டைட்டில் வைத்துள்ளார். மேலும் விஜயின் கதாபாத்திரமும் சிங்கம் போல் தான் இருக்கும் என்று கூறப்படுகிறது.

Also Read : லியோ படத்தில் விஜய்யுடன் நடித்த பிக்பாஸ் போட்டியாளர்.. ட்வீட் மூலம் உறுதி செய்த நடிகை

இந்நிலையில் சிங்கத்தை தத்ரூபமாக காட்ட சிஜி வேலைகள் நடந்து வருகிறதாம். இதற்காக மட்டுமே கிட்டதட்ட 15 கோடி செலவாகியுள்ளதாம். சமீப காலமாக தமிழ் படங்களில் விலங்குகள் பங்கு பெறுவது சற்று குறைவு தான். ஆனால் லியோ படத்தில் சிங்கம் இடம்பெறுவது ரசிகர்களுக்கு உச்சகட்ட மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சும்மாவே லோகேஷ் தரமாக இறங்கி செய்வார். இப்போது சிங்கத்தை வைத்து என்ன செய்யப் போகிறார் என ரசிகர்களுக்கு தலையே சுற்றுகிறது. மேலும் லோகேஷ் தனது படங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு லியோ படத்தில் புது முயற்சியை கையாளுவதால் படத்தின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.

Also Read : விஜய்யை வைத்து கேவலமான விளம்பரம் தேடும் விஷால்.. பப்ளிசிட்டியா இல்ல பதவியா, உஷாரா இருங்க

- Advertisement -

Trending News