ஜெயிலரின் வெற்றியை மறக்கடிக்க களமிறங்கும் லியோ.. லோகேஷ்-க்கு தளபதி போட்டோ ஆர்டர்

Actor Vijay In Leo Movie: தற்போது ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அனைவரும் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படம் லியோ. லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படம் வருகிற அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவர இருக்கிறது. ஆனால் அதற்கு முன் இப்படத்தின் ஆடியோ லான்ச் எப்பொழுது நடக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கிறார்கள்.

அந்த வகையில் ஆடியோ லான்ச் மலேசியாவில் வைக்கப் போவதாக தகவல் வெளியானதில் ரசிகர்களுக்கு மிகவும் அதிர்ச்சியை அளித்தது. இதனால் ஏமாற்றத்தை அடைந்த ரசிகர்கள் பலரும் கடுப்பாகி, மலேசியாவில் நடந்தாலும் பரவாயில்லை எங்களுக்காக தமிழ்நாட்டிலும் நடத்தப்பட வேண்டும் என்று அவர்களுடைய ஆசைகளை தெரிவித்து வந்தார்கள்.

Also read: ஜெயிலரால் வேகம் எடுக்கும் ரஜினி, ஆட்டத்தை ஆரம்பிக்கும் அஜித்.. சிக்கலில் மாட்ட போகும் விஜய்

ஆனால் இதற்கு எந்த பதிலும் சொல்லாமல் படக்குழு மௌனம் காத்து வந்தார்கள். இந்த சமயத்தில் ஜெயிலர் படத்தின் வெற்றியை பார்த்து லியோ படக்குழுவில் உள்ள அனைவரும் அப்படியே மிரண்டு விட்டார்கள். இதனால் விஜய் தந்திரமான ஒரு முடிவை எடுத்து லியோ படத்தின் ஆடியோ லாஞ்சை மலேசியாவில் வைக்க வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.

மேலும் தமிழ்நாட்டில் வைக்கலாம் என்று கூறி அதற்காக சென்னையில் பிரமாண்டமாக நடத்தலாம் என்று பேசி வருகின்றனர். அதற்கு என்ன காரணம் என்று சரியாக கூறாமல் ஒரே முடிவாக சென்னையில் நடத்தலாம் என்று மட்டும் பதிலை கூறியிருக்கிறார். ஆனால் உண்மையில் விஜய் இப்படி ஒரு முடிவை எடுத்ததற்கான காரணம் லியோ படத்தை பெரிய அளவில் பிரமாண்டமாக வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதற்காகத் தான்.

Also read: 500 கோடி வடைக்கு தயாராகும் ஜெயிலர்.. அதிக வசூலால் வயிற்றெரிச்சலில் ப்ளூ சட்டை போட்ட வைரல் போஸ்ட்

ஏற்கனவே ஜெயிலர் படத்தின் வெற்றி தற்போது எங்கு திரும்பினாலும் ஆரவாரமாக பேசப்பட்டு வருவதால் இதனை மறக்கடிக்கும் விதமாக லியோ படத்தின் ஆடியோ லான்ச் இருக்க வேண்டும் என்று யோசித்து தான் இந்த முடிவை எடுத்திருக்கிறார். அந்த வகையில் லியோ படத்தின் ஆடியோ லான்ச் தமிழ்நாட்டில் நடத்தினால் இங்கே இருக்கும் ரசிகர்களை குஷி படுத்தின மாதிரி இருக்கும்.

ரசிகர்களை குஷிப்படுத்தி விட்டால் லியோ படம் வெற்றி அடைந்து விடும் என்பதற்காக லோகேஷ்க்கு, விஜய் இந்த ஆர்டரை போட்டிருக்கிறார். அந்த வகையில் ரஜினியை தாக்கி நிறைய சம்பவங்கள் லியோ ஆடியோ லாஞ்சில் காத்துக் கொண்டிருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது.

Also read: சன்னியாசியா போனாலும் சக்க போடு போடும் ஜெயிலர்.. குகைக்குள் பாபா வைரல் புகைப்படம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்