ரஜினி ஸ்டைலில் கெத்து காட்டும் லெஜெண்ட் சரவணன்.. புது படத்தின் அப்டேட், வெளியான புகைப்படங்கள்

Legend Saravanan New Movie Update: என்ன தான் காசு பணம் இருந்தாலும் பேரும் புகழும் இருந்தால் இன்னும் வாழ்க்கை ஜம்முனு அமையும் என்று பலரும் ஆசைப்படுவது உண்டு. அது போல தான் பிரபல ஜவுளி கடை மற்றும் ஷாப்பிங் கடையின் உரிமையாளராக இருக்கும் லெஜெண்ட் சரவணனுக்கு சினிமா மீது அதீத ஆசை ஏற்பட்டிருக்கிறது. அதனால் தி லெஜன்ட் என்ற படத்தை இவரை தயாரித்து நடிக்கவும் செய்தார். இப்படம் ஓரளவுக்கு சுமாரான வரவேற்பை பெற்றது.

legend saravana
legend saravana

இருந்தாலும் தொடர்ந்து அடுத்த படத்தின் மூலம் மக்களை சந்திப்பேன் என்று கூறியிருந்தார். அந்த வகையில் இவருடைய காமெடியான முகத்தோற்றத்தையும் நடிப்பையும் பார்த்து பலரும் கேலி, கிண்டல் செய்த நிலையில் அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரஜினி ஸ்டைலில் கெத்துக் காட்டிய புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

legend saravana (1)
legend saravana (1)

கருடன் பட இயக்குனருடன் கைகோர்த்த லெஜன்ட் சரவணா

இந்த புகைப்படங்களை பார்க்கும் பொழுது இது லெஜெண்ட் சரவணாவா என்று ஆச்சரியப்பட்டு கேட்கும் அளவிற்கு புகைப்படங்களில் மிரட்டலான லுக்கை கொடுத்து வித்தியாசமாக இருக்கிறார். அந்த வகையில் இவர் நடிக்கப் போகும் அடுத்த புது படத்தை இயக்கப் போவது துரை செந்தில்குமார். இவர் ஏற்கனவே இவரை வைத்து படம் எடுக்க வேண்டும் என்று கதைகளை கூறியிருக்கிறார்.

legend saravana (2)
legend saravana (2)

கதையை கேட்ட லெஜெண்ட் சரவணாவிற்கு ரொம்பவே பிடித்து போனதால் இவர்களுடைய கூட்டணி விரைவில் ஆரம்பமாகும் என்ற தகவல் வெளியானது. அந்த வகையில் இயக்குனர் துரை செந்தில்குமார் சமீபத்தில் இயக்கிய கருடன் படம் வெற்றிகரமாக ஓடிய நிலையில். அடுத்த படமாக கையில் எடுக்கப் போவது லெஜெண்ட் சரவணாவை வைத்து தான்.

legend saravan
legend saravan

அதற்காக லெஜன்ட் சரவணாவின் புகைப்படத்தை இயக்குனர் அவருடைய இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார். இன்னும் இப்படத்தின் டைட்டில் முடிவாகாத நிலையில் தொடர்ந்து அடுத்தடுத்த அப்டேட்டுகளை ஒவ்வொன்றாக வெளியிடுவார்.

director durai sendhil
director durai sendhil

Next Story

- Advertisement -