லியோ படத்தில் இணைந்த லெஜன்ட்.. காஷ்மீரில் இருந்து வெளியான பகிர் வீடியோ

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் லியோ படம் உருவாகி வருகிறது. திரிஷா, அர்ஜுன், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சஞ்சய் தத் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் இணைந்துள்ளார்கள். மேலும் இப்படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் தயாரித்து வருகிறார்.

இப்போது லியோ படத்தின் படப்பிடிப்புக்காக படக்குழு காஷ்மீரில் மையம் கொண்டுள்ளது. அங்கு த்ரிஷா எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. எப்போதுமே லோகேஷ் தனது படங்களில் ரசிகர்கள் எதிர்பார்க்காத வண்ணம் ஏதாவது ட்விஸ்ட் வைத்திருப்பார்.

Also Read : அதிக எதிர்பார்ப்புகளைக் கிளப்பிய 9 பான் இந்தியா படங்கள்.. லியோ உடன் போட்டி போடும் சூர்யா

அந்த வகையில் லியோ படத்தில் முக்கிய பிரபலம் ஒருவர் கேமியோ தோற்றத்தில் நடிக்கிறாராம். அதாவது கடந்த ஆண்டு மிகப்பெரிய பேசுபொருளாக மாறிய விஷயம் சரவணா ஸ்டோர் அண்ணாச்சியின் தி லெஜன்ட் படம் தான். எப்படியோ ரசிகர்கள் மத்தியில் இவர் நன்கு பிரபலம் ஆகிவிட்டார்.

இப்போது அண்ணாச்சி தன்னுடைய அடுத்த பட வேலைகளில் பிஸியாக உள்ளாராம். அதாவது மீண்டும் கதாநாயகனாக ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்நிலையில் லியோ படத்தில் சில காட்சிகளில் அண்ணாச்சி நடிக்க உள்ளாராம். அதற்காக இப்போது காஷ்மீர் சென்றுள்ளார்.

Also Read : திரிஷாவுக்கு எச்சரிக்கை விடுத்த குடும்பம்.. லியோ படப்பிடிப்பில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்

அங்கு பிரம்மாண்ட ஹோட்டலில் தங்கியிருக்கும் அண்ணாச்சி வீடியோ எடுத்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் லியோ படத்தில் அண்ணாச்சி இணைந்திருப்பது கிட்டத்தட்ட உறுதி ஆகிவிட்டது. சாதாரண கல்லாக இருந்தாலும் அதை சிற்பமாக மாற்றக்கூடியவர் லோகேஷ்.

அப்படி இருக்கையில் அண்ணாச்சியை வைத்து கண்டிப்பாக ஏதாவது சம்பவம் செய்திருப்பார். மேலும் தி லெஜன்ட் படம் வெளியான போது விஜய், அஜித்துக்கு போட்டியாக தான் வருவேன் என்று கூறிய அண்ணாச்சி இப்போது விஜய் படத்தில் நடிப்பது ஆச்சரியமான விஷயம் தான்.

Also Read : லியோ உடன் மோதிப் பார்க்கத் தயாராகும் சஞ்சய் தத்.. இணையத்தை அலறவிடும் ஜிம் புகைப்படம்

Next Story

- Advertisement -