250 கோடி சம்பளத்தை விட்டுட்டு 2000 கோடியை நோக்கி போறாரா.? விஜய்யின் அரசியலை புட்டு புட்டு வைக்கும் Teenz பார்த்திபன்

Parthiban Talk about Vijay Political Entry: பார்த்திபன் நடித்த படங்கள் நகைச்சுவையாக இருந்தாலும், இயக்கிய படங்கள் எதார்த்தமான கதைகளை சொல்லும் வகையில் இருக்கும். பார்த்திபனின் பேச்சும் அறிவுப்பூர்வமாக புரியாத புதிராக இருக்கும். அப்படிப்பட்டவர் சில வருடங்களுக்குப் பிறகு Teenz படத்தை இயக்கியிருக்கிறார்.

இப்படம் நாளை ரிலீஸ் ஆகப்போகிறது. ஆனால் அதே நாளில் தான் சங்கர் இயக்கி கமல் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 2 படமும் ரிலீஸ் ஆகப்போகிறது. அப்படிப்பட்ட பிரம்மாண்ட படத்துடன் பார்த்திபன் இயக்கிய படமும் வருவதால் டிக்கெட் விலை 100 ரூபாய் குறைத்து ப்ரமோஷன் செய்யும் வகையில் பல பேட்டிகளை கொடுத்து வருகிறார்.

தளபதியின் அரசியலைப் பற்றி ஓபனாக பேசிய பார்த்திபன்

அந்த வகையில் இவர் அளித்த பேட்டியில் விஜய்யின் அரசியல் வருகையை பற்றி கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு வழக்கம் போல பார்த்திபன் மனதில் பட்டதை போட்டு உடைக்கும் விதமாக அனைத்தையும் புட்டு புட்டு வைத்திருக்கிறார். அதாவது அவர் கூறியது என்னவென்றால், விஜய்யின் அரசியல் வருகை உண்மையிலே பாராட்டக்கூடிய விஷயமாக பார்க்கிறேன்.

50 வயதானாலும் இப்பொழுதும் 25 வயது இளைஞர் போல சுறுசுறுப்பாகவும் உத்வேகத்துடன் தான் செயல்பட்டு வருகிறார். அதுபோக அவர் அரசியலுக்கு வருவது மக்களுக்கு ஒரு நல்லதை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தான். 200 கோடி பணம் வாங்கி ஒரு படத்தில் ஹீரோவாக நடித்ததை விட 2000 கோடி சம்பாதித்து மக்களுக்கு நிஜ ஹீரோவாக வாழ்ந்து காட்டலாம் என்று எண்ணம் அவருக்கு வந்துவிட்டது என வழக்கம்போல் அவருடைய புரியாத பாஷையில் பேசி இருக்கிறார்.

அதற்கு அவர் கூறிய விளக்கம் என்னவென்றால் விஜய் அரசியலுக்கு போவதால் கடைசி படமாக தளபதி 69வது படத்தோடு முடிக்கப் போகிறார். ஆனால் அந்த படத்திற்கு 400 கோடி சம்பளம் வேண்டும் என்று கேட்டால் கூட தயாரிப்பாளர்கள் கொடுக்க தயாராக இருக்கிறார்கள். அப்படி இருக்கும் பொழுது அதையெல்லாம் விட்டுவிட்டு அரசியலுக்குப் போகிறார் என்றால் நிச்சயமாக மக்களுக்கு ஏதாவது பண்ண வேண்டும். நிஜ ஹீரோனா எப்படி இருக்க வேண்டும் என்பதை காட்ட தான்.

ஆனால் அப்படி வருபவர் எல்லாத்துக்கும் தயாராக இருக்க வேண்டும். ஏனென்றால் கமல் அரசியலுக்கு வரும்பொழுது நிச்சயம் அவருக்கு வெற்றி கிடைக்கும் என்ற ஒரு நோக்கம் அனைவருக்கும் இருந்தது. ஆனால் இப்பொழுது என்ன நிலைமை என்று அனைவரும் தெரிந்தது. அதுபோல சிரஞ்சீவி, மெகா சூப்பர் ஸ்டார் ஆக ஜொலித்துக் கொண்டிருக்கிறார். அப்படிப்பட்டவர் அரசியலுக்கு போனதும் அழகிய முட்டையால் தாக்கப்பட்டிருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

அது போல அரசியலுக்கு நுழைந்து விட்டால் நாளை என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அதற்கெல்லாம் நம்மளை ஆயத்தமாக வைத்துக் கொண்டு ஒவ்வொரு முயற்சியையும் செய்ய வேண்டும். அதற்கான வலிமை விஜய்க்கு இருக்க வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டி பேசி இருக்கிறார். அத்துடன் என்னுடைய ரேஞ்சுக்கு நான் ஒரு இடத்துக்கு ஆட்டோல போவதற்கு தயார். ஆனால் என்னை பஸ்ல போக சொன்னால் கண்டிப்பாக என்னால் முடியாது.

இப்போ இருக்கிறதை விட என்னால் சொகுசு வாழ்க்கையை கொஞ்சம் குறைத்துக் கொள்ள முடியாது. இந்த ஒரு விஷயம் எனக்கே இப்படி இருக்கிறது என்றால் விஜய் rolls-royce கார்ல போறவர், அரசியலுக்காக தரையிலும் உட்கார்ந்து கால்நடையாக நிற்கவும் செய்கிறார். அப்படி என்றால் அவர் உண்மையிலேயே அரசியலுக்கு ஒரு நல்ல வழிகாட்டுதலாக இருப்பார் என்று நம்புகிறேன் என தளபதியின் அரசியலை பற்றி பார்த்திபன் அவருடைய கருத்துக்களை ஓபன் ஆக சொல்லி இருக்கிறார்.

மும்மரமாக செயல்படும் தமிழக வெற்றி கழகம்

Next Story

- Advertisement -