சன் டிவியின் பிரபல சீரியலில்லிருந்து விலக்கப்பட்ட முக்கிய நடிகை! வழுக்கட்டாயமாக வெளியேற்றியது ஏன்?

சன் டிவியில் பலவிதமான கதைகளை கொண்ட சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது அதில் ‘கண்ணான கண்ணே’ சீரியல் மக்கள் மத்தியில் அதிக ரசிகர்களை ஏற்படுத்தி வைத்துள்ளது. மிகவும் பிரபலமான இந்த சீரியலில் இருந்து முக்கிய நடிகை ப்ரியா பிரின்ஸ் திடீரென்று விலகிவிட்டதாக தகவல் வெளியிட்டுள்ளார்.

கண்ணான கண்ணே சீரியலில் அப்பா கதாபாத்திரமாக நடிகர் பப்லு நடித்து வருகிறார். மேகனா என்ற நெகட்டிவ் கதாபாத்திரத்தில் ப்ரியா பிரின்ஸ் நடித்துக்கொண்டிருக்கிறார். அத்துடன் இந்த சீரியலில் கதாநாயகியாக நிமிஷிகாவும் கதாநாயகனாக ராகுல் ரவியும் நடித்து வருகின்றனர்.

டிஆர்பி ரேட்டிங்கில் முக்கிய இடத்தை வகிக்கும் கண்ணாலே கண்ணே சீரியலில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் மாற்றம் ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது நடிகை பிரியா பிரின்ஸ் திடீரென்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘தான் இந்த நாடகத்தை விட்டு விலகி விட்டதாகவும், இது அதிகாரப்பூர்வமான அறிவிப்பு என்றும் சக நடிகர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும், இயக்குனர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். அத்துடன் நடப்பது அனைத்தும் நன்மைக்குத்தான்’ என்றும் கூறியுள்ளார். இச்செய்தி தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

priya-prince-cinemapettai

இந்த செய்தி கண்ணான கண்ணே நாடகத்தின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமன்றி சன் டிவி நட்சத்திரங்களுக்கு மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது என்றே சொல்லலாம். இந்த நடிகை திடீரென நாடகத்தை விட்டு விலகியது ஏன்? என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழுந்துள்ளது.

நடிகை பிரியா அவர்களின் இந்த திடீர் முடிவு ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் பிரியா பிரின்ஸ் இந்த நாடகத்தில் இடம்பெற்றுள்ள கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி இருப்பார். இருப்பினும் கண்ணான கண்ணே சீரியலில் இருந்து பிரியா அவர்களை வலுக்கட்டாயமாக விளக்கி உள்ளனரா? என்ற கேள்வியும் ரசிகர்கள் இடையே எழுந்துள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்