டிஆர்பி ரேட்டிங்கில் விஜய் டிவியை தாங்கி பிடிக்கும் ஒரே சீரியல்.. இல்லனா சன் டிவி தான் டாப்

தொலைக்காட்சித் தொடர்களை பார்க்கும் ரசிகர்களுக்கு அனுதினமும் சுவாரஸ்யம் குறையாத எபிசோடுகளை வழங்குவதின் மூலம் தான், சீரியல்களை பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரித்து டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்த முடியும். இந்த வேலையை விஜய் டிவியும் சன் டிவியும் கச்சிதமாக செய்கின்றனர்.

எனவே கடந்த வார டிஆர்பி ரேட்டிங் தற்போது வெளியாகியுள்ளது. அதில், முதலிடத்தில் விஜய் டிவியின் ‘பாரதி கண்ணம்மா’ பிடித்துள்ளது. 2-வது இடத்தை சன் டிவியின் ‘ரோஜா’ சீரியல் தக்கவைத்துள்ளது. 3-வது இடத்தில் ‘வானத்தைப்போல’ சீரியலும், 4-வது இடத்தில் ‘பூவே உனக்காக’ சீரியலும், 5-வது இடத்தில் ‘சுந்தரி’யும், 6-வது இடத்தில் ‘கண்ணான கண்ணே’ சீரியலும் இடம்பிடித்துள்ளது.

கடந்த வாரம் டிஆர்பி ரேட்டிங் இன் டாப் 5 இடங்களில் முதலிடத்தை மட்டும் தக்க வைத்துக்கொண்ட விஜய் டிவி ஏனைய நான்கு இடத்தையும் சன் டிவிக்கு விட்டுக் கொடுத்து விட்டது. அதன்பின், 7-வது இடத்தில் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர் சீரியலும், 8-வது இடத்தில் பாக்கியலட்சுமி,

9-வது இடத்தில் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலும், 10-வது இடத்தில் ராஜா ராணி2 சீரியலும் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு டிஆர்பி ரேட்டிங் என்பது சீரியலில் இடம்பெற்றிருக்கும் திரைக்கதையை வைத்தே கிடைக்கக்கூடிய அங்கீகாரமாக கருதப்படுகிறது.

top-tamil-serial
top-tamil-serial

விஜய் டிவியின் ஒரு சில சீரியல்கள் ஆன பாண்டியன் ஸ்டோர், பாக்கியலட்சுமி, நாம் இருவர் நமக்கு இருவர், ராஜா ராணி2 போன்ற சீரியல்களின் கதைகளை எல்லாம் தற்போது ரசிகர்களை யூகிக்கும் விதமாக காண்பிக்கப்படுகிறது.

அதனால்தான் டாப்-5 லிஸ்டில் இருக்கும் இந்த சீரியல்கள் எல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஆனால் பாரதி கண்ணம்மா மட்டும் சுவாரசியம் குறையாமல் அதனுடைய ரசிகர்களின் ஆதரவுடன் வெற்றிப்பாதையில் பயணிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்