நமக்கு மானம் மரியாதை தான் முக்கியம்.. லால் சலாம் படத்திலிருந்து வரிசையாக பிச்சு கிட்டு போகும் பிரபலங்கள்

கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாக்கப்படும் லால் சலாம் படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குகிறார். இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். லைக்கா தயாரிக்கும் லால் சலாம் படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைக்கிறார். இதில் ரஜினியும் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார்.

இந்நிலையில் இந்த படத்தில் அடுத்தடுத்த பிரபலங்கள் விலகுவதாக தகவல் வெளியானது. முதலில் படத்தின் ஆடை வடிவமைப்பளரும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பருமான காஸ்டியூம் டிசைனர் பூர்ணிமா ராமசாமி லால் சலாம் படத்திலிருந்து விலகினார். அதன் பிறகு விஷ்ணு விஷால் படத்திலிருந்து விலகுவதாக தகவல் வெளியானது.

Also Read: பையன் ஒரு மாதிரி, அவன் கூட தங்க வேண்டாம்.. மகளை கூப்பிட்டு கண்டித்த ரஜினி

ஏற்கனவே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷின் 3, கௌதம் கார்த்தியின் வை ராஜா வை என்ற படங்களை இயக்கினார். தற்போது தனுஷ் உடன் ஏற்பட்ட விவாகரத்திற்கு பிறகு மீண்டும் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்திருக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், லால் சலாம் படத்தின் படப்பிடிப்புக்கான வேலையை பரபரப்பாக பார்த்துக் கொண்டிருக்கிறார்.

இருப்பினும் படப்பிடிப்பு தளத்தில் யாரையுமே மதித்துப் பேசாமல் தான் ஒரு பெரிய இயக்குனர் என்ற மமதையில் ஓவர் ஆட்டிட்யூட் காட்டி கொண்டிருப்பதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் மீது குற்றம் சாட்டுகின்றனர். இதனால் விஷ்ணு விஷால் இந்த படத்தில் இருந்து விலகிவிட்டார். ஏனென்றால் அதிக பிரசங்கித்தனம் காரணமாக ஓவர் ஆட்டிட்யூட் காட்டும் ஐஸ்வர்யா ரஜினிகாந்திடம் இணைந்து பணி புரிவது விஷ்ணு விஷாலுக்கு பிடிக்கவில்லை.

Also Read: லால் சலாம் படத்திற்கு சூப்பர் ஸ்டார் வாங்கிய சம்பளம்.. கெஸ்ட் ரோலுக்கு இத்தனை கோடியா!

நமக்கு மான மரியாதை தான் முக்கியம் என கடைசி நேரத்தில் படத்தில் இருந்து விலகினார். அவரைத் தொடர்ந்து இப்போது படத்தில் இசையமைப்பாளர் ஏஆர் ரகுமானும் லால் சலாம் படத்திலிருந்து விலகுவதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் படத்திற்கான சரியான கதையையோ காட்சிகளையோ கொடுக்காமல் இஷ்டத்திற்கு சூப்பர் ஹிட் மியூசிக் வேண்டும் என்று அன்பு தொல்லை செய்யும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் செயல் ஏஆர் ரகுமானை கடுப்பேற்றியது.

இதனால் அவர் நைசாக படத்திலிருந்து எஸ்கேப் ஆகி விடலாம் என்று யோசித்து வருவதாகவும் ஷாக்கிங் தகவல் வெளியாகி உள்ளன. ஆனால் ரஜினியின் முகத்திற்காக இந்த படத்தில் கமிட் ஆகி விட்ட நிலையில் திடீரென்று வெளியேறுவது நல்லா இருக்காது என நினைத்து, பல்லை கடித்துக் கொண்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உடன் பணியாற்றி வருகிறாராம். இதனால் விரைவில் இந்த படத்தின் பணிகளை முடித்து விட்டு அடுத்த படத்திற்கு செல்லவே ஏஆர் ரகுமான் யோசித்து வருகிறார் என்றும் கூறுகின்றனர்.

Also Read: ரஜினியின் பெயரை டேமேஜ் செய்யும் குடும்பம்.. நிஜ வாழ்க்கையிலும் நடிக்கும் சூப்பர் ஸ்டார்

Next Story

- Advertisement -