திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

மீண்டும் 8 ஆண்டுகள் கழித்து பாரதிகண்ணம்மா சீரியலில் வளர்ந்த லஷ்மி.. ட்ரெண்டான ப்ரோமோ.!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் தற்போது டிஆர்பியில் நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்துள்ள பாரதிகண்ணம்மா, தொடர்ந்து அடுத்ததாக டுவிஸ்ட்களை வெளியிட்டு வருகிறது. ஏற்கனவே பாரதியும் கண்ணம்மாவும் பிரிந்து வாழக் கூடிய சூழ்நிலையில் பாரதிக்கு திடீரென ஞானோதயம் பிறந்ததாக சென்ற ப்ரோமோவில் காட்டி இருந்தனர்.

இனி வாழப்போகும் வாழ்க்கையை கண்ணம்மா உடன் இணைந்து வாழ வேண்டும் என்று அவர் கூறுவது போல் சென்ற வார ப்ரோமோவில் சீன்கள் இடம் பெற்று உள்ளது. ரசிகர்களால் உருவாக்கப்பட்ட ப்ரோமோ வீடியோவில் கண்ணம்மாவின் மூத்த மகளாக அனிகாவை காண்பித்துள்ளனர்.

இதைப் பார்த்ததும் சிலருக்கு பலவிதமான கேள்விகளை எழுப்பியுள்ளது. இதில் 8 வருடங்கள் கழித்து என்று, லக்ஷ்மி பெரிய மகளாக மாறியது போலவும், கண்ணம்மா கதாபாத்திரம் கலக்கலாக மாறியது போலவும் காண்பிக்கப்பட்டது.

இதனால் கண்ணம்மாவிற்கு இரண்டு குழந்தைகள் என்ற உண்மை தெரிந்து விட்டதா? பாரதியும் கண்ணம்மாவும் ஒன்றாக இணைந்து விட்டார்களா? வெண்பாவின் சதி வெளிப்பட்டதா? போன்ற பல கேள்விகள் எழுந்துள்ளது.

இது ரசிகர்களால் உருவாக்கப்பட்ட போதும் என்பதால் இதை பார்த்ததும் சிலர், ‘ஒரு மனுஷன் புழுவலாம், இப்படி ஏக்கர் கணக்குல புளுவகூடாது’ என கிண்டல் அடிக்கின்றனர். இருப்பினும் பார்வையாளர்களின் கவனத்தை அதிகம் கவர்வதற்காக பாரதிகண்ணம்மா தனது அடுத்த சீசனில் வித்தியாசமான கதைக்களத்துடன் களமிறங்குகிறது.

இனி வரக்கூடிய எபிசோடுகளில் பாரதியும் கண்ணம்மாவும் இணைந்து இருப்பது போன்ற காட்சிகள் இடம் பெறுமா? என்று ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Trending News