செட்டாகாது ஹீரோக்களுடன் நடித்த கேரியரை தொலைத்த லைலா.. வாய்ப்பில்லாமல் போக காரணமாக இருந்த 5 படங்கள்

கன்னக்குழி சிரிப்பழகி லைலா சினிமாவுக்கு வந்த புதிதில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை பெற்றார். இவருடைய குழந்தைத்தனமான சிறப்பிக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். இவருடைய பல படங்கள் ரசிகர்கள் மத்தியில்ல் நல்ல வரவேற்பு கிடைத்தாலும் தனக்கு சுத்தமாக செட்டாகாத சில ஹீரோக்களுடன் நடித்து கேரியரை தொலைத்துள்ளார். அவ்வாறு லைலா பீல்டை விட்டுப் போக காரணமாக இருந்த 5 படங்களை பார்க்கலாம்.

கள்ளழகர் : லைலாவின் அறிமுக படம் தான் கள்ளழகர். இந்த படத்தில் கேப்டன் விஜயகாந்த்க்கு ஜோடியாக லைலா நடித்திருந்தார். இவர்களிடையே வயது வித்தியாசம் அதிகம் என்பதால் இவர்களை ஜோடியாக ஏற்றுக் கொள்ள ரசிகர்களுக்கு முடியவில்லை. இந்த படம் படுதோல்வி அடைந்தது.

Also Read : சர்தார் படத்திற்குப் பிறகு குவியும் பட வாய்ப்பு.. மாஸ் வில்லனுக்கு ஜோடியாகும் லைலா

ரோஜாவனம் : செல்வா இயக்கத்தில் கார்த்திக், மாளவிகா, லைலா, ஆகாஷ் மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் ரோஜாவனம். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக லைலா நடித்திருப்பார். இந்த ஜோடி திரையில் பார்ப்பதற்கு சுத்தமாகவே செட்டாகவில்லை.

அள்ளித்தந்த வானம் : பிரபுதேவா, லைலா, முரளி மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் அள்ளித் தந்த வானம். இந்த படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக லைலா நடித்திருந்தார். பிரபுதேவா உடன் லைலாவுக்கு கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகவில்லை.

Also Read : 22 ஆண்டுகளுக்கு பிறகு பிரபல நடிகரை சந்தித்த லைலா.. இந்த ஜோடி நல்ல ஜோடி தான்

காமராசு : முரளி, லைலா கூட்டணியில் வெளியான திரைப்படம் காமராசு. இந்த படத்தை அன்பழகன் இயக்கி இருந்தார். இந்தப் படம் லைலாவின் கேரியரில் மோசமான படமாக அமைந்தது. மேலும் பெரிய அளவில் ரசிகர்களிடமும் காமராசு படம் கவனம் பெறவில்லை.

கம்பீரம் : சுரேஷ் இயக்கத்தில் சரத்குமார், லைலா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் கம்பீரம். இந்த படத்தில் லைலாவுக்கு ஜோடியாக சரத்குமாரை ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இவ்வாறு தனக்கு செட்டாகாத ஹீரோக்களை தேர்ந்தெடுத்து லைலா தனது மார்க்கெட்டை இழந்து உள்ளார்.

Also Read : லைலாவுக்கு அந்த நடிகர் மேல லவ் வந்துச்சாம்.. 41 வயதில் வருத்தப்பட்டு என்ன ஆகப்போகுது!

Next Story

- Advertisement -