சன்னி லியோன் தான் என்னோட குரு.. வாடகை தாய்க்கு பின்னால் இப்படி ஒரு காரணமா?

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்ட செய்தி தரப்பது இணையத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது. இந்த விஷயத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் பேசி வருகிறார்கள். இது சரி, தவறு என்பதை காட்டிலும் இது அவர்களுடைய விருப்பம் என பெரும்பாலானோர் கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வது தமிழ் சினிமாவில் புதிதாக இருந்தாலும் பாலிவுட் பிரபலங்கள் நிறைய பேர் இவ்வாறு செய்துள்ளார்கள். அதாவது கவர்ச்சி படங்களில் நடித்த மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை சன்னி லியோன். இவர் திருமணத்திற்கு பின்பு குழந்தை பெற்றுக் கொள்ளாமல் இருந்தார்.

Also Read : வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற 6 சினிமா பிரபலங்கள்.. சத்தமே இல்லாமல் காய் நகர்த்திய நயன்தாரா

சில வருடங்கள் கழித்து ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்தார். அதன் பின்பு வாடகை தாய் மூலம் இரண்டு குழந்தைகளை பெற்றுக் கொண்டார். சில நடிகைகள் குழந்தை பெற்றுக் கொண்டால் அழகு போய்விடும் என்பதற்காக இவ்வாறு செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.

ஆனால் இது குறித்து சன்னி லியோன் கூறுகையில், எனக்கு குழந்தைகள் என்றால் அதிகப் பிரியம் உண்டு. அதே சமயத்தில் என்னுடைய வேலையையும் நான் அதிகம் காதலிக்கிறேன். மேலும் குழந்தை பெற்றுக் கொண்டால் ஒரு குழந்தையை மட்டும் தான் பெற முடியும்.

Also Read : நயன்தாராவை கைது செய்ய வாய்ப்பு இருக்கா? மறைமுகமாக போட்டுக்கொடுத்த கஸ்தூரி

ஆனால் இப்போது மூன்று குழந்தைகளுக்கு தாயாகியுள்ளேன் என்று சன்னி லியோன் குறிப்பிட்டிருந்தார். அதே போல் தான் நயன்தாராவுக்கும் குழந்தைகள் மீது ஆசை உண்டு. ஆனால் தற்போது தன்னுடைய பட வேலைகளில் மிகவும் பிசியாக உள்ளார்.

ஆகையால் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளனர். அதேபோல் அக்டோபர் ஒன்பதாம் தேதி இவர்கள் இருவருக்கும் இரட்டை ஆண் குழந்தை பிறந்து உள்ளது.

Also Read : பணமும், அழகும் தான் எங்களுக்கு முக்கியம்.. தமிழ் கலாச்சாரத்தை அழிக்கும் விக்கி-நயன்தாரா ஜோடி

Next Story

- Advertisement -