இதுவரைக்கும் நமக்கு தெரியாத 6 நட்சத்திர ஜோடிகள்.. இதென்ன புது கதையா இருக்கு

சினிமாவில் ஜோடியாக நடித்து நிஜ வாழ்விலும் ஜோடியாக மாறிய பலரை நாம் பார்த்துள்ளோம். ஆனால் ஒரு சில ஜோடிகளைப் பற்றி நாம் அறிய வாய்ப்பில்லை. அப்படி நாம் அறியாத சில நட்சத்திர கணவன் மனைவிகளை பற்றிக் காண்போம்.

டிஸ்கோ சாந்தி – ஸ்ரீஹரி தமிழ் சினிமாவில் 80 கால கட்டத்தில் தன்னுடைய நடன திறமையால் ரசிகர்களை கவர்ந்தவர் டிஸ்கோ சாந்தி. அப்போது நடிகை சில்க் ஸ்மிதாவுக்கு போட்டியாக இருந்த ஒரே நடிகை இவர் தான். தற்போது சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கும் இவர் ஸ்ரீஹரி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

ஸ்ரீஹரி வேறு யாருமல்ல தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த வேட்டைக்காரன் என்ற திரைப்படத்தில் கண் தெரியாத போலீஸ் ஆபீஸராக நடித்தவர் தான். இவர் தமிழை தவிர பல தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு தவறான சிகிச்சையின் காரணமாக அவர் மரணமடைந்தார்.

ரேவதி – சுரேஷ் மேனன் எண்பதுகளின் பிரபல நடிகையாக இருந்த ரேவதி இயக்குனரும், நடிகருமான சுரேஷ் மேனனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் இணைந்து புதிய முகம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

1986 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர்கள் கருத்து வேறுபாட்டின் காரணமாக கடந்த 2013 ல் விவாகரத்து பெற்று பிரிந்தனர். தற்போது இவர்கள் இருவரும் தங்கள் சினிமா வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

ஊர்வசி – மனோஜ் கே ஜெயன் முந்தானை முடிச்சு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ஊர்வசி அதன் பிறகு பல திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

இவர் மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கும் மனோஜ் கே ஜெயன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மனோஜ் கே ஜெயன் விக்ரம் நடித்த தூள் திரைப்படத்தில் போலீசாக நடித்து இருப்பார். அது தவிர அவர் எல்லாம் அவன் செயல் உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது ஊர்வசியை விவாகரத்து செய்து வேறு திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார்.

ஈஸ்வரி ராவ் – ராஜா இவர் பல தமிழ் திரைப் படங்களில் நடித்திருந்தாலும் காலா திரைப்படத்தில் ரஜினிக்கு மனைவியாக நடித்தது தான் அவருக்கு அதிக பிரபலத்தை கொடுத்தது.

இவருடைய கணவர் ராஜாவும் ஒரு திரைப்பட நடிகர் தான். 80 காலகட்டத்தில் வெளியான பல தமிழ் திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார் தற்போது சின்னத்திரையில் நடித்து வரும் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தென்றல் வந்து எண்ணை தொடும் என்ற சீரியலில் ஹீரோவுக்கு அப்பாவாக நடித்து வருகிறார்.

சேத்தன் – தேவதர்ஷினி மர்ம தேசம் என்ற திகில் தொடரில் நடித்ததன் மூலம் இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு பல சீரியல்களில் இவர்கள் இருவரும் இணைந்து ஒன்றாக நடித்துள்ளனர்.

தற்போது தேவதர்ஷினி தமிழ் சினிமாவில் பல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் சேத்தன் மற்றும் தேவதர்ஷினி இருவரும் இணைந்து விஜய் சேதுபதியின் அனபெல்லா திரைப்படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

சீதா – சதீஷ் நடிகர் பார்த்திபனை காதலித்து திருமணம் செய்து கொண்ட சீதா கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து பெற்று பிரிந்தார். அதன்பிறகு சின்னத்திரையில் சில சீரியல்களில் இவர் நடித்து வந்தார்.

அப்போது சக நடிகரான சதீஷை அவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் இணைந்து சன் டிவியில் ஒளிபரப்பான வேலன் என்ற சீரியலில் நடித்தனர். தற்போது சீதா அவருடனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

கிருஷ்ணா – சாயா சிங் திருடா திருடி என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை சாயா சிங். அந்த திரைப்படத்தை தொடர்ந்து அவர் பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ஆனந்தபுரத்து என்னும் வீடு என்ற திரைப்படத்தில் அவர் நடிக்கும் பொழுது சக நடிகர் கிருஷ்ணாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கிருஷ்ணா சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியலில் பிரகாஷ் எனும் கேரக்டரில் நடித்து பிரபலமானவர். தற்போது இவர்கள் இருவரும் சன் டிவி சீரியலில் நடித்து வருகின்றனர்.