வருட கணக்காக ரிலீஸ் பண்ண முடியாமல் கோடிக்கணக்கில் நஷ்டத்தில் 5 படங்கள்.. பிரசாந்த்தின் கெட்ட நேரம்

Tamil movies delayed for release due to financial issues: காலம் கடந்து விற்கப்படும் பொருளுக்கு மவுசு குறைவு என்பது போல் தமிழ் சினிமாவில் சில படங்கள் காலத்தோடு எடுக்கப்பட்ட பின்னும் சில பொருளாதார சிக்கல்கள் காரணமாக படம் வெளியிடப்படும் தேதி தள்ளிக் கொண்டே போகிறது. இதன் பாதிப்பு  கலைஞர்கள் பலரது வாழ்க்கையிலும் தாக்கத்தை உண்டாக்குகிறது என்பதே உண்மை.

துருவ நட்சத்திரம்: சில வருடங்களுக்கு முன் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தொடங்கப்பட்ட துருவ நட்சத்திரம் பல சோதனைகளுக்குப் பின் நடிகர் ஒருவர் பின் ஒருவராக மாறி முடிக்கப்பட்டது. ரிலீஸ் பண்ணும் தேதி அறிவித்து கொண்டு இருக்கும்போதே படத்திற்கு வந்த சோதனை, படத்தை நிறுத்த நீதிமன்றம் போட்ட உத்தரவு தான். நல்ல கதை, சிறந்த இயக்கம் என ரசிகர்கள் அனைவரும் இதனை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

பார்ட்டி: வெங்கட் பிரபுவின் ரசிகர்கள் தரமான காமெடியுடன் கூடிய பார்ட்டியை ஆவலுடன் எதிர்நோக்கி இருந்த வேளையில், திடீரென பார்ட்டி படம் தாமதமானது ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து உருவான இப்படம் தணிக்கை குழுவின் சான்றிதழ் பெற்று ரிலீஸ் க்கு வர இருந்த நிலையில் படமாக்கப்பட்ட பிஜூ தீவின் பொருளாதார நெருக்கடி காரணமாக படம் வெளியிடுவதில் சிக்கல் இருந்து வருகிறது.

Also Read: தளபதி 68 விஜய் படமே கிடையாது.. டைட்டில்லயே வெங்கட் பிரபு தரப்போகும் சர்ப்ரைஸ்

இடம் பொருள் ஏவல்: அதிகமாக கிராமத்து  சாயல்களோடு படம் இயக்கும் சீனு ராமசாமி அவர்கள்  யுவன் சங்கர் ராஜா இசையில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், விஷ்ணு  கூட்டணியில் இப்படம் ரெடியாகி உள்ளது.  திரைக்கதைக்கு தகுந்தவாறு நடிகர்கள் அடிக்கடி மாற்றப்பட்டனர் படத்தை வெளியிடுவதற்கு எதிராக இருந்த வழக்குக்கு தீர்வு வந்த நிலையில் படக்குழு படத்தை விரைவில் வெளியிடப் போவதாக அறிவித்து உள்ளது.

நரகாசுரன்: கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த்சாமி, சந்திப்கிஷன் நடித்து ரிலீசுக்கு காத்திருக்கும் படம் தான் நரகாசுரன். பொருளாதார சிக்கல்கள், இயக்குனர்-தயாரிப்பாளர் மோதல் என பல சிக்கல்களை கடந்து தணிக்கை குழுவினரால் சான்றிடப்பட்டு ரெடியாகி உள்ளது. தற்போது படத்தின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் சேவையை சோனி லைவ்  வாங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து விரைவில் படம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வர் சுந்தரம்: கே பாலச்சந்தர் இயக்கி நாகேஷ் அவர்கள் நடித்த சர்வர் சுந்தரம் படத்தின் டைட்டில் மட்டும் எடுத்துக் கொண்டு நகைச்சுவை நடிகர் சந்தானத்தை வைத்து டெலிவரி செய்வதாக இருந்த சர்வர் சுந்தரம் பல நாட்கள் ஆகியும் வெளிவர முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது படத்தின்  இயக்குனர் பால்கி அவர்களோ, “என் படம் பிரியாணி போல எப்போது சாப்பிட்டாலும் பிடிக்கும் என்று ரசிகர்கள் மனதை தேற்றி வருகிறார்.

அந்தகன்: நீண்ட இடைவெளிக்குப்பின் பிரசாந்த்தை வைத்து அவரது தந்தை தியாகராஜன் இயக்கியிருக்கும் படம் அந்தகன்.  சிம்ரன், கார்த்திக், யோகி பாபு, வனிதா விஜயகுமார் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். பிளாக் காமெடி வகையை பயன்படுத்தி இருக்கும் இந்த படத்தின் வேலைகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகி உள்ள இப்படம் 2024  ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: விஜய்யின் சூழ்ச்சியில் மாட்டிக்கொண்ட பிரசாந்த்.. நாலா பக்கமும் அஜித்துக்கு செக் வைக்கும் தளபதி