மகா கலைஞன் என நிரூபித்த கமல்.. இறந்த நண்பருக்காக உலகநாயகன் செய்யும் தரமான சம்பவம்

Kollywood Actor Kamal haasan KH237 movie update and its interesting facts: “நீ பெரும் கலைஞன்! நிரந்தர இளைஞன்! ரசனை மிகுந்த ரகசிய கவிஞன்” இந்த வாக்கியத்திற்கு சொந்தக்காரர் வேறு யாரும் அல்ல உலகநாயகன் கமல்ஹாசன் தான். தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் இயக்குனர்கள் “கமலுடன் ஒரு படம்” என்பதை தனது சாதனையாக கொண்டுள்ளனர்.   பல இயக்குனர்களும் இவரை வைத்து படம் இயக்க போட்டி போட இவரோ புதுமுக இயக்குனர் இருவருக்கு வாய்ப்பளித்து உள்ளார் என்பது கோலிவுட்டை ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியுள்ளது.

லோகேஷ்கனகராஜ் இயக்கத்தில் 2022 வெளிவந்த விக்ரம் திரைப்படம் கமலஹாசன் அவர்களுக்கு இன்னும் வயதாகவில்லை என்பதை உணர்த்தியது. “போர் கண்ட சிங்கம்! வலிகொண்ட நெஞ்சம்! இருந்தாலும் உனக்காக உயிர் வாழ்கிறேன்” என்று கலைக்காகவே வாழ்கிறார் என்பதை நிரூபித்தது விக்ரம்.

விக்ரம் படப்பிடிப்பின் போது டெக்னீசியன் யார்கிட்டயும் பர்சனலா எதையும் பேச மாட்டாராம் கமல். ஆனால் இந்த படத்தின் போது ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்த அன்பு  அறிவு இரட்டை சகோதரர்களின் ஒர்க் ரொம்ப புடித்துப் போனதால் அவர்களுடன் நெருங்கி பழகி போனாராம் கமல். ஒரு கட்டத்தில் அவர்களுக்கு என்ன ஆசை என்று கேட்டு உள்ளார் அவர்கள் டைரக்டர் ஆகணும் ஆக வேண்டும் என்று சொல்ல, உடனே எனக்கு ஸ்டோரி ரெடி பண்ணுங்க. அதுல நான் நடிக்கிறேன் என்று அவர்களை அசர வைத்துவிட்டாராம்.

Also read: ஆரம்பிக்கவே இல்ல அதுக்குள்ள கமல் போடும் கண்டிஷன்.. தலையைப் பியித்துக் கொள்ளும் மணிரத்னம் 

இதன் பின்னணி என்னவென்றால் எம்ஜிஆர் படங்களில் ஒர்க் பண்ணின R N நம்பியார் அவர்களின் மகன் தர்மசீலன். சத்யராஜ் கமல் நடித்த பழைய விக்ரம் படத்தின் மூலம் ஸ்டண்ட் மாஸ்டராக அறிமுகமானார் இதன் மூலமே இவர் விக்ரம் தர்மா என்று அழைக்கப்பட்டார். கமலின் ஆரம்பகால படங்களில் ஒன்றாக இணைந்து பணியாற்றிய விக்ரம் தர்மாவின் மீது கமலுக்கு அதீத அன்பு. அவர் இயக்குனராக வேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டாராம். காலத்தின் கொடுமையால் சிறுநீரக செயலிழப்பின் காரணமாக 2006 ஆம் ஆண்டு மறைந்தார் விக்ரம் தர்மா.

தனது நண்பர் விக்ரம் தர்மாவின் ஆசையை மனதில் வைத்துக்கொண்டு அதனை அன்பறிவு சகோதரர்களின் வாழ்க்கையில் நிறைவேற்றியுள்ளார் கமல். “இந்த மனசு தான் சார் கடவுள்!  தன்னை கலைஞனாக மட்டுமல்ல மகாகலைஞனாக நிரூபித்த கமலை வாழ்த்த நமக்கு வார்த்தைகளும் இல்லை, வயதும் இல்லை .

2025 ஆண்டு ஆக்சனை மையமாக வைத்து KH237 படத்தை அன்பு அறிவு சகோதரர்கள் இயக்க உள்ளனர். விக்ரம் தவிர கபாலி, லியோ போன்ற படங்களுக்கு ஸ்டண்ட் இயக்குனர்களாக பணியாற்றியுள்ளனர் இச்சகோதரர்கள். கேஜிஎப் படத்திற்காக இச்சகோதரர்களுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 2025 ஆண்டு விக்ரம் 2 ரிலீஸுக்கு அப்புறம் அன்பு அறிவு சகோதரர்களது படத்தில் கமல் நடிக்க இருக்கிறார்.

Also read: ஆளவந்தானிடம் சிக்கிக் சின்னா பின்னமான முத்து.. வசூலில் சாதனை படைத்த கமல்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்