ஆரம்பிக்கவே இல்ல அதுக்குள்ள கமல் போடும் கண்டிஷன்.. தலையைப் பியித்துக் கொள்ளும் மணிரத்னம்

Mani Ratnam – Kamal : மணிரத்னம், கமல் கூட்டணி உறுதியான நிலையில் இந்த படத்தின் டைட்டில் வீடியோ வெளியிடப்பட்டது. இப்படத்திற்கு தக் லைஃப் என்று பெயரிடப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என ரசிகர்கள் பெரிதும் காத்துக் கொண்டிருந்தனர். இந்த படத்தில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான், த்ரிஷா போன்ற பிரபலங்கள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் கடந்த ஜனவரி 8 இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் எனக் கூறப்பட்டது. ஆனால் கமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிசியாக இருந்ததால் படப்பிடிப்பு தொடங்குவது தாமதமாக்கப்பட்டது. அதன்பிறகு ஜனவரி 18 படப்பிடிப்பு தொடங்கும் என சொல்லப்பட்ட நிலையில் அதுவும் தாமதமானது.

ஆனால் இப்போதும் தக் லைஃப் படப்பிடிப்புக்கான செட் போடும் பணி முடியவில்லையாம். மேலும் வருகின்ற 22 ஆம் தேதி கமலுக்கான போஷன் படப்பிடிப்பு தொடங்க உள்ளனர். ஓரே கட்டமாக படப்பிடிப்பு நடத்தி மே மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என மணிரத்னத்திற்கு கமல் கண்டிஷன் போட்டு இருக்கிறாராம்.

Also Read : சிம்புவை வைத்து புது பிசினஸுக்கு பிள்ளையார் சுழி போட்ட கமல்.. மொத்த ராஜதந்திரத்தையும் இறக்கிய ராஜ்கமல்

அதாவது நான்கு மாதத்தில் படத்தை எப்படி முடிப்பது என்று தெரியாமல் தலையை பியித்துக் கொண்டிருக்கிறார் மணிரத்தினம். ஏனென்றால் விக்ரம் படத்திற்கு பிறகு கமல் நடிப்பில் எந்த படமும் வெளியாகாமல் இருக்கிறது. இந்தியன் படத்தின் இரண்டு பாகங்கள் இந்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே சூட்டுடன் இந்த வருடத்திற்குள்ளாகவே தக் லைஃப் படத்தையும் ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற முடிவில் கமல் இருக்கிறார். ஆனாலும் இது கமலை காட்டிலும் மணிரத்தினத்திற்கு தான் மிகப்பெரிய சவாலாக அமைந்திருக்கிறது. ஆகையால் மணிரத்னம் இரவு, பகல் பாராமல் தக் லைஃப் படத்திற்காக வேலை பார்க்க உள்ளார்.

Also Read : வாட்ச் கிப்ட் வாங்குறதுக்கு எல்லாம் ஒரு அந்தஸ்து வேணும்.. கமல் மனதை கவர்ந்து பரிசு வாங்கிய 4 நடிகர்கள்