ஒரே வருடத்தில் 10 படங்களில் நடித்த குஷ்பூ.. எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட்டச்சே

தமிழ் சினிமாவில் 80களில் ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை குஷ்பூ. அதிலும் தனது அழகாலும், நடிப்பு திறனாலும் எக்கச்சக்க ரசிகர்களை தன் வசம் வைத்திருந்தார். அதிலும் குறிப்பாக ஒரு வருடத்தில் மட்டும் கிட்டத்தட்ட பத்து படங்களுக்கு மேல் நடித்து மிகவும் பிஸியான நடிகையாக வலம் வந்தார். அதிலும் அனைத்து படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. அவை என்னென்ன படங்கள் என்பதை இங்கு பார்க்கலாம்.

மன்னன்: பி வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் 1992 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மன்னன். இதில் ரஜினிகாந்த் உடன் விஜயசாந்தி, குஷ்பூ, கவுண்டமணி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இப்படத்தில் குஷ்பூ, மீனா என்னும் கதாபாத்திரத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். அதிலும் இப்படம் 25 வாரங்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி மாபெரும் வெற்றி பெற்றது.

ரிக்ஷா மாமா: இயக்குனர் பி வாசு இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ரிக்ஷா மாமா. இதில் சத்யராஜ் உடன் கௌதமி, குஷ்பூ, விஜயகுமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இப்படத்தில் குஷ்பூ சத்யராஜின் மனைவியாக கௌரி என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதிலும் இப்படம் 100 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி மாபெரும் வசூல் சாதனை படைத்தது.

Also Read: 90களில் ஆதிக்கம் செலுத்திய ஜோடி.. பிரபு, குஷ்பூ நடிப்பில் வெற்றி பெற்ற 5 படங்கள்

சிங்காரவேலன்: ஆர் பி உதயகுமார் இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சிங்காரவேலன். இதில் கமலஹாசன் உடன் குஷ்பூ, ஜெய்சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் குஷ்பூ இப்படத்தில் சிங்காரவேலனின் காதலியாக சுமதி என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதிலும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி பெற்றது.

பாண்டித்துரை: மனோஜ் குமார் இயக்கத்தில் கே பாலு தயாரிப்பில் 1992 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பாண்டித்துரை. இதில் பிரபு உடன் குஷ்பூ, ராதாரவி, மனோரமா, சில்க் ஸ்மிதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் குஷ்பூ இப்படத்தில் முத்துலட்சுமி என்னும் கேரக்டரில் பிரபுவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதிலும் இப்படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

சேவகன்: அர்ஜுன் இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சேவகன். இதில் அர்ஜுன் உடன் குஷ்பூ, நாசர், வெண்ணிற ஆடை மூர்த்தி, செந்தில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் குஷ்பூ இப்படத்தில் கல்லூரி மாணவியாக அஞ்சலி என்னும் கேரக்டரில் நடித்து அசத்தியிருப்பார். அதிலும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி படமாக அமைந்தது

இது நம்ப பூமி: பி வாசு இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இது நம்ம பூமி. இதில் கார்த்திக், குஷ்பூ, விஜயகுமார், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இப்படத்தில் நளினி என்னும் கேரக்டரில் குஷ்பூ, கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வணிக ரீதியாக வெற்றி பெற்றது.

Also Read: இளம் நடிகைகளே தோற்று போயிடுவாங்க.. குஷ்புவை பக்கம் பக்கமாக வர்ணிக்கும் ரசிகர்கள்!

அண்ணாமலை: சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அண்ணாமலை. இதில் ரஜினிகாந்த் உடன் குஷ்பூ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இப்படத்தில் சுப்புலட்சுமி என்னும் கதாபாத்திரத்தில் சூப்பர் ஸ்டாருக்கு மனைவியாக குஷ்பூ நடித்திருப்பார். மேலும் இப்படம் வணிக ரீதியாக மாபெரும் வெற்றி பெற்று சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

அம்மா வந்தாச்சு: பூர்ணிமா பாக்யராஜ் தயாரிப்பில் 1992 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அம்மா வந்தாச்சு. இதில் பாக்கியராஜ் உடன் குஷ்பூ, ஸ்ரீதேவி விஜயகுமார், டெல்லி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இப்படத்தில் நந்தினி என்னும் கேரக்டரில் குஷ்பூ தனது அசாத்திய திறமையை வெளிப்படுத்தி இருப்பார். மேலும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி படமாக அமைந்தது.

நாளைய செய்தி: ஜி பி விஜய் இயக்கத்தில் பிரபு நடிப்பில் வெளியான திரைப்படம் நாளைய செய்தி. இதில் பிரபு உடன் குஷ்பூ, கவுண்டமணி, செந்தில், ஜெய் கணேஷ், ஜெய்சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இப்படத்திற்கு ஆதித்தியன் இசையமைத்திருந்தார். அதிலும் இப்படத்தில் அனுராதா என்னும் கேரக்டரில் பிரபுவுக்கு ஜோடியாக குஷ்பு நடித்திருந்தார்.

பாண்டியன்: எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் பாண்டியன். இதில் ரஜினிகாந்த், குஷ்பூ, ஜனகராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அதிலும் ரேகா என்னும் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த்திற்கு ஜோடியாக குஷ்பூ நடித்திருந்தார். மேலும் இப்படம் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி பெற்றது.

Also Read: இறப்பதற்கு முன் நடிகையின் மீது உச்சகட்ட லவ்வில் இருந்த சுந்தர் சி.. குஷ்பூவால் சொல்ல முடியாமல் போன காதல்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்