பீனிக்ஸ் பறவை போல் மீண்டு வந்த கீர்த்தி சுரேஷ்.. ஒரே பாட்டால் பயத்தில் இருக்கும் டாப் ஹீரோயின்கள்

வாரிசு நடிகையாக சினிமாவில் நுழைந்த கீர்த்தி சுரேஷ் தன்னுடைய திறமையான நடிப்பால் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்தார். விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார். அதன் பின்பு அவர் தேர்ந்தெடுத்து நடித்த படங்களால் சுத்தமாக மார்க்கெட்டை இழந்தார்.

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார். மேலும் இந்தப் படத்திற்காக பல ஹிட் படங்களின் வாய்ப்பையும் கீர்த்தி சுரேஷ் தவற விட்டு இருந்தார். ஆனால் கடைசியில் அண்ணாத்த படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு ஸ்கோப் கிடைக்கவில்லை.

Also read: ஸ்டைலாக இருக்கும் கீர்த்தி சுரேஷ்.. சிரித்தபடி வெளியான புகைப்படம்

அந்த படமும் கலவையான விமர்சனங்களை தான் பெற்றிருந்தது. ஆகையால் தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காததால் தெலுங்கு, மலையாளம் என அக்கடதேச மொழி படங்களில் நடிக்க சென்றார். அங்கேயும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு கீர்த்தி சுரேஷின் படங்கள் வெற்றி பெறவில்லை.

இப்போது மீண்டும் கீர்த்தி சுரேஷ் தமிழ் மொழியில் நடிக்க வந்து விட்டார். இனிமேல் கீர்த்தி சுரேஷின் கேரியர் அவ்வளவு தான் ஃபீல்ட் அவுட் ஆகிவிடுவார் என பலர் கூறி வந்தனர். ஆனால் அதற்கெல்லாம் சரியான பதிலடி கொடுக்கும் படி கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தசரா படம் வெளியாகி உள்ளது.

Also read: தேசிய விருதுக்கு பின் குவியும் பட வாய்ப்புகள்.. கீர்த்தி சுரேஷ் கைவசம் இத்தனை படங்களா.?

நானி ஹீரோவாக நடித்திருந்த தசரா படம் பான் இந்திய திரைப்படமாக ஐந்து மொழிகளில் வெளியாகி இருந்தது. இதில் வெண்ணிலா என்ற கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். மேலும் தசரா படத்தில் கீர்த்தி சுரேஷ் ஆடிய நடனத்திற்கு தற்போது மொத்த தெலுங்கு சினிமாவும் வாயை பிளந்துள்ளதாம்.

இப்போது எங்கு பார்த்தாலும் அந்தப் பாடல் தான் ஒலித்துக் கொண்டிருக்கிறது. மேலும் அந்தப் பாட்டுக்கு ஆட்டம் போட்ட 120 பேருக்கு 2 கிராம் தங்க காயினை கீர்த்தி சுரேஷ் வழங்கி உள்ளார். அதுமட்டுமின்றி பீனிக்ஸ் பறவை போல கீர்த்தி சுரேஷ் தொடர் தோல்விக்கு பிறகு மீண்டும் சரியான ரிட்டன் கொடுத்துள்ளதால் இவரை பார்த்து மற்ற ஹீரோயின்கள் மிரண்டு போய் உள்ளனராம்.

Also read: வித்தியாசமான போட்டோ ஷூட் நடத்திய கீர்த்தி சுரேஷ்.. செம க்யூட்டான புகைப்படங்கள்

- Advertisement -