கிசு கிசுப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்த கீர்த்தி சுரேஷ்.. விஜய்க்கு கொடுத்த மிகப்பெரிய ஷாக்

தென்னிந்திய திரையுலகில் ரசிகர்களின் ஃபேவரிட் நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் குறித்து அவ்வப்போது சோசியல் மீடியாவில் கிசுகிசுக்கள் வந்த வண்ணம் இருக்கும். அதிலும் பிரபல நடிகருடன் தொடர்ந்து கிசுகிசுக்கப்படும் நிலையில் அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அவருடைய காதலர் யார் என்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

இந்த விஷயத்தை கீர்த்தி சுரேஷ் முதலில் விஜய்க்கு தெரிவித்ததால் அவர் பெரும் அதிர்ச்சியில் இருக்காராம். கீர்த்தி சுரேஷ் பற்றிய வதந்திகள் தற்பொழுது வெளிவந்து கொண்டிருக்கின்றன அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில், சூடான தகவல் வெளியாகி உள்ளது.

Also Read: எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது? வருத்தத்தில் கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ் பள்ளி நாட்களில் இருந்து இன்று வரை ஒரு கேரள இளைஞரை காதலித்து வருகிறாராம். இரு குடும்பங்களும் சேர்ந்து அவர்கள் காதலுக்கு பச்சைக்கொடி காட்டி உள்ளனர். நான்கு வருடம் கழித்து திருமணம் செய்யப் போவதாக பேசியுள்ளனர்.

அவர் கேரளாவில் மிகப்பெரிய தொழிலதிபர் மகன் ஆவார். மேலும் அவர் கேரளாவில் சொந்தமாக ஒரு ரெசார்ட்ஸ் ஒன்றையும் வைத்திருக்கிறாராம். இவரை நடிகர் விஜய்க்கு அறிமுகம் செய்து அவர் வீட்டுக்கு விஜய் வரவைத்து தனது காதலரை சந்தோஷப்படுத்தியுள்ளார் கீர்த்தி சுரேஷ்.

Also Read: இதுலாம் ஒரு டிரஸ்ஸ, சுத்தமா செட் ஆகல.. கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட கிளாமர் புகைப்படங்கள்

கீர்த்தி சுரேஷின் பல கிசுகிசுகளுக்கு இந்த செய்தி ஒரு முற்றுப்புள்ளி ஆக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சோசியல் மீடியாவில் ஹாட் டாபிக்காக பேசப்படும் இந்த செய்தி உண்மையாகும் விதத்தில் கீர்த்தி சுரேஷ் விரைவில் அவரது திருமண தேதியும் அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வளவு விஷயம் வெளிவந்த பிறகு ஒளிவு மறைவு எதற்கு! அதனால் கீர்த்தி சுரேஷ் தன்னுடைய காதலனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்றும் சோசியல் மீடியாவில் அவருடைய ரசிகர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Also Read: பரிதவிக்கும் கீர்த்தி சுரேஷ்.. 29 வயது தேசியவிருது நடிகைக்கு இப்பவே இந்த நிலைமையா!

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்