சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

பட ப்ரோமோஷனில் படுமோசமாக நடந்து கொண்ட கீர்த்தி சுரேஷ்.. வாய் எடுக்காமல் செய்த சாகசம்

தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக உள்ள கீர்த்தி சுரேஷ், இப்போது ஏகப்பட்ட பட வாய்ப்புகளை கையில் வைத்திருக்கிறார். முதலில் அடக்க ஒடுக்கமாக நடித்துக் கொண்டிருந்த இவர், கடந்த சில நாட்களாக கவர்ச்சி ரூட்டுக்கு திரும்பியுள்ளார். இவருடைய கிளாமர் தூக்கலான புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் இளசுகளை திணறடித்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் நடிகர் நானி உடன் தசரா படத்தில் நடித்துள்ளார். ஸ்ரீகாந்த் ஒடியலா இயக்கியுள்ள இந்த படம் தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வரும் மார்ச் 30-ந் தேதி வெளியாக உள்ளது. படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

Also Read: டாப் ஹீரோக்களுக்கு தங்கையாக நடித்து கேரியரை தொலைத்த 5 ஹீரோயின்கள்.. பரிதாபமான நிலையில் கீர்த்தி சுரேஷ்

படம் வெளியாகுவதற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே இருப்பதால் படக் குழுவினர் தென்னிந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் ப்ரோமோஷன் பணிகளை தொடங்கி உள்ளனர். மேலும் தசரா படத்தின் இறுதி நாள் படப்பிடிப்பின் போது நடிகை கீர்த்தி சுரேஷ் படக்குழுவை சேர்ந்த 130 பேருக்கு தலா 10 கிராம் தங்க நாணயங்களை பரிசாக வழங்கியதும் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் இந்த படத்திற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றுள்ளது. இதில் படத்தில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ், நானி, ராணா உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது படத்தின் டிரைலரில் நடிகர் நானி வாயிலில் சரக்கு பாட்டிலை கையில் எடுக்காமலே குடித்து முடிப்பது போல் காட்சி இடம் பெற்றுள்ளது.

Also Read: சிவராத்திரி அன்று ரசிகர்களுக்கு காட்சி கொடுத்த கீர்த்தி சுரேஷ்.. இணையத்தில் ட்ரெண்டாகும் போட்டோஸ்

அதேபோல் கீர்த்தி சுரேஷும் மும்பையில் நடந்த ரோமோஷன் நிகழ்ச்சியில் நானி மது குடிக்கும் ஸ்டைலை அப்படியே செய்து அசத்தியுள்ளார். அவர் ஒரு பாட்டிலை ஒரே கல்ப்பாக வாயெடுக்காமல் குடித்துவிட்டு தூக்கி எறிந்த புகைப்படம் மற்றும் வீடியோஸ் இணையத்தில் வைரலாக பரவுகிறது.

இதைப் பார்த்த நெட்டிசன்கள் தாறுமாறாக கமெண்ட் செய்கின்றனர். மேலும் இந்த போட்டோஸ் உடன் குடிமகளே என்ற பாடலையும் ஒலிக்கவிட்டு இணையத்தை ரணகளம் செய்து கொண்டிருக்கின்றனர். மேலும் படத்தின் ப்ரோமோஷனுக்காக இவ்வளவு மோசமாகவா நடந்து கொள்வது என, கீர்த்தி சுரேஷின் இந்த சாகச செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவிக்கின்றனர்.

தசரா பட ப்ரொமோஷனல் படுமோசமாக நடந்து கொண்ட கீர்த்தி

keerthi-cinemapettai
keerthi-cinemapettai

Also Read: நடிகைகள் கைநழுவ விட்ட பக்காவான 7 படங்கள்.. குந்தவையாக நடிக்க இருந்த கீர்த்தி நடிகை

- Advertisement -

Trending News