ஒத்த தாலி டோட்டல் லைஃப் காலி.. திருமணத்திற்கு பின் பொட்டிப் பாம்பாக அடங்கிய கவின்

Kavin: காலம் நேரம் கூடி வந்தால் எல்லாமே நல்லதாகவே நடக்கும் என்பதற்கு உதாரணமாக சினிமாவில் சாதித்துக் காட்டியவர் லிஸ்டில் நடிகர் கவினும் இடம் பெற்றிருக்கிறார். ஆரம்பத்தில் சின்ன சின்ன கேரக்டர்கள் மூலம் முகத்தை காட்டி வந்த கவின் தற்போது இளம் ஹீரோ என்ற முத்திரையுடன் ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.

அந்த வகையில் இவர் நடிப்பில் வெளிவந்த லிப்ட் மற்றும் டாடா படம் மக்கள் அதிக அளவில் வரவேற்பு கொடுத்து வெற்றியடைய செய்து விட்டார்கள். இதனை தொடர்ந்து இவருக்கு பல வாய்ப்புகள் குவிந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் திடீரென்று இவருடைய திருமணம் பலருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் அவசர திருமணமாக முடிந்து விட்டது.

இதற்கு அடுத்து வாய்ப்புகள் கொஞ்சம் கூட குறையாமல் ஹீரோவாகவே அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி வருகிறார். ஆனாலும் இவரைப் பற்றி சில விமர்சனங்கள் தற்போது முன்வைக்கப்பட்டு வருகிறது. அதாவது கவின் பொருத்தவரை ரொம்பவே ஜாலியாக இருக்கணும், அவரை சுற்றி இருப்பவர்கள்  எப்பொழுதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என நினைக்கக் கூடியவர்.

Also read: லீக்கானது ஜேசன் சஞ்சய்- கவின் படத்தின் ஸ்டோரி.. சூப்பர் ஹிட் படத்தின் காப்பியா.?

அத்துடன் இவருக்கு மிகப்பெரிய பக்கபலமாக இருந்தது இவருடைய நண்பர்கள்தான். அவர்கள் மூலமாக தான் நடிப்பதற்கு ஈசியாக சான்ஸ் கிடைத்திருக்கிறது. இப்படி எல்லாம் இருக்கும் பட்சத்தில் தற்போது கவின் திருமணத்திற்கு பின்பு மொத்தமாகவே மாறி விட்டாராம். யாரிடமும் சகஜமாக பேசுவது இல்லை, பிரெண்ட்ஸ் போன் பண்ணா கூட சரியா பதில் பேசாமல் இருக்கிறாராம்.

அத்துடன் எந்நேரமும் வீட்டிற்குள்ளேயே அடைந்து போய் இருக்கிறார். வெளியே வந்தால் படப்பிடிப்புக்கு மட்டும் வந்துட்டு பேக்கப் ஆன பிறகு அப்படியே நேராக வீட்டிற்குள் அடங்கி விடுகிறார் என்று இவரை சுற்றி இருக்கும் நண்பர்கள் தற்போது இவரைப் பற்றி இந்த மாதிரியான விஷயங்களை கூறி வருகிறார்கள். அது மட்டுமில்லாமல் இவருடைய மேனேஜர் இவருக்கு ரொம்ப க்ளோஸ் பிரண்டாக இருந்திருக்கிறார்.

அப்படிப்பட்டவரை தற்போது மாற்றி விட்டு கவின் தன்னுடைய மனைவியின் தம்பியை மேனேஜராக வைத்து விட்டாராம். இப்படி இவரை சுற்றி நடக்கும் இந்த விஷயங்களுக்கு முக்கிய காரணமே கவினின் மனைவி தான். அவர் ரொம்பவே ஸ்ட்ரிக்டா கண்டிஷனோட இருப்பதினால் தான் கவின் இந்த மாதிரி மாறிவிட்டார் என்று பேசப்படுகிறது. இதனால் கவினின் கேரியர் கூட பாதிக்குமா என்ற சில கேள்விகளை எழுப்பி வருகிறது

Also read: கவின் போல் எலிமினேஷனை கச்சிதமாக கணிக்கும் போட்டியாளர்.. கருநாகமாக சுற்றி வரும் சைக்கோ

- Advertisement -spot_img

Trending News