வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

கதிர் எடுத்த முடிவு சரிதான் சப்போர்ட் செய்யும் தனம்.. உச்சகட்ட கோபத்தில் முல்லை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கொஞ்ச மாதங்களாகவே கதையை இல்லாமல் உருட்டி வருகிறார்கள். அதனால் இந்த நாடகத்தை யாரும் மறந்து விடக்கூடாது என்பதற்காக அவ்வப்போது அண்ணன் தம்பிகளின் பாசத்தை வைத்து செண்டிமெண்டாக கொண்டு வருகிறார்கள்.

கண்ணன் ஐஸ்வர்யாவின் நிலைமையை பார்த்து வருடிப்போன கதிர், அண்ணன் மூர்த்தியிடம் எந்தவித ஆலோசனையும் கேட்காமல் தன்னிச்சையாக முடிவெடுத்து அவர்களை வீட்டுக்கு கூட்டிட்டு வந்து விடுகிறார். பின்பு இதை எப்படியாவது மூர்த்தி மாமாவிடம் சொல்லி சமாதானப்படுத்தி கண்ணன் ஐஸ்வர்யாவை இங்கேயே தங்க வைக்க விடணும் என்று தனமும் நினைக்கிறார்.

Also read: கதிரை கதற கதற வச்சு செய்த நந்தினி.. ஜீவானந்தம் மாஸ் என்ட்ரியால் குணசேகரனுக்கு ஆப்பு

ஆனால் முல்லை மட்டும் கொஞ்சம் கோபமாக இருக்கிறார். அதற்கு காரணம் இந்த கண்ணன் பையனால் தான் கதிர் ஜெயிலுக்கு போய் கஷ்டப்பட்டு இருக்கிறார் என்பதால். அதனால் தனத்திடம் ஜாடமாடையாக வம்பு இழுக்கிறார் முல்லை. பிறகு மூர்த்தி வந்ததும் தனம் ஏதோ சுத்தி வளைத்து பேசுகிறார்.

இதை பார்த்த மூர்த்தி, தனம் ஏதோ சொல்ல வருகிறார் என்று புரிந்து கொண்டு என்னவென்று கேட்கிறார். அப்பொழுது கண்ணனை கூட்டிட்டு வந்து அழைத்து மூர்த்தியிடம் இடுகிறார். கண்ணனை பார்த்த மூர்த்தி கோபத்தில் கொந்தளிக்கிறார். பிறகு கண்ணனை தனம் உள்ளே போ என்று சொல்கிறார்.

Also read: ராதிகாவின் மகளிடம் அன்பைப் பொழியும் பாக்கியா.. ஒவ்வொரு நாளும் டார்ச்சரை அனுபவிக்கும் கோபி

அடுத்ததாக மூர்த்தியை சமாதானப்படுத்துவதற்காக எவ்வளவோ சொல்லிப் பார்க்கிறார் தனம். ஆனால் அதை எதையும் கேட்காத மூர்த்தி கோபப்படுகிறார். பிறகு தனம் எல்லா கஷ்டத்தையும் கண்ணனால் அனுபவித்தது கதிர் தான். ஆனால் கதிரே எல்லாத்தையும் மறந்து விட்டு தன் தம்பி கஷ்டப்படக் கூடாது என்பதற்காக வீட்டிற்கு கூட்டிட்டு வந்திருக்கிறான்.

இதை தடுப்பதற்கு எந்த உரிமையும் இல்லை என்று சொல்லி, அத்துடன் உங்களிடம் இருந்து இதை நான் எதிர்பார்க்கவும் இல்லை. கண்ணன் தான் சின்ன பையன் தெரியாமல் ஏதோ தப்பு பண்ணுகிறான் என்றால் நீங்களும் அதற்கு இணையாக இப்படி பிடிவாதம் பிடிப்பது நியாயம் இல்லை என்று கூறுகிறார். ஆனால் இதற்கு இடையில் கண்ணன் இன்னும் இலட்சக்கணக்கில் வட்டிக்கு காசு வாங்கி இருக்கிறார் என்று தெரிந்தால் இந்த குடும்பம் என்ன ஆகும் என்று தெரியவில்லை.

Also read: ஆதிரை திருமணத்திற்கு ஜீவானந்தம் வைக்கும் செக்.. தோற்கப் போகிறது ஜனனி இல்ல குணசேகரன்

- Advertisement -

Trending News