புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

ஐஸ்வர்யா ஆட்டத்தால் அல்லல் படும் கண்ணா.. கஷ்டத்தில் கைகொடுத்து காப்பாற்றிய கதிர்

ஒரு நேரத்தில் விரும்பி பார்த்த சீரியல் என்று சொன்னால் அது பாண்டியன் ஸ்டோர்ஸ் தான். என்னதான் கதையே இல்லாமல் உருட்டினாலும் இவர்களுடைய ஒற்றுமையான குடும்பத்தை பார்க்கும் போது ஏதோ ஒரு தனி பீல் கொடுத்தது. அதற்காகவே இந்த நாடகத்தை பார்த்து வந்தார்கள். ஆனால் இப்பொழுது வருகிற எபிசோடு எல்லாம் ரொம்பவே எரிச்சல் படுத்துற மாதிரியும் இதை பார்க்கவே வேண்டாம் என்று தோன்றும் அளவிற்கு தான் இருக்கிறது.

இதற்கு பருத்திமூட்ட பேசாம குடவுன்ல இருந்திருக்கலாம். கதையே இல்லைனா சீக்கிரம் முடிச்சு தொலைங்க. அதை விட்டுபுட்டு விறுவிறுப்பாக கொண்டு போக வேண்டும் என்று நல்லா இருந்த கேரக்டர் எல்லாம் நெகட்டிவா கொண்டு போய் பார்க்கவே முடியாத அளவிற்கு பண்ணிட்டீங்க. அதாவது கண்ணன் வேலைக்கு போவதாக காட்டி சம்பாதித்த காசு மொத்தமும் நன்றாக செலவு செய்து இஷ்டத்துக்கு வாழலாம் என்று ஐஸ்வர்யாவை அப்படியே மாற்றி விட்டார்கள்.

Also Read: நிஜமான வில்லியாக மாறிய கோபியின் அம்மா.. ராதிகா நல்லது செஞ்சும் பிரயோஜனமில்லை

இந்தத் தொடரின் படி ஐஸ்வர்யா, கண்ணன் தான் நன்றாகவே சம்பாதிக்கிறானே அப்புறம் நம்ம இஷ்டத்துக்கு எல்லா பொருளையும் வாங்கி விடலாம் என்று நினைக்கிறார். அதற்கும் பூம்பூம்மாடு மாதிரி தலையை ஆட்டிக்கொண்டு ஐஸ்வர்யா என்ன சொன்னாலும் கண்ணன் செய்கிறான். ஒரு கட்டத்தில் இவர்கள் சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் போன பிறகு யூட்யூபில் வீடியோ எடுத்து அதன் மூலம் வரும் காசை சம்பாதித்து பெரிய பாப்புலராக ஆகிவிடலாம் என்று ஒவ்வொன்றையும் செய்து வருகிறார்கள்.

ஆனால் கடைசியில் ஐஸ்வர்யாவுக்கு ஆஸ்பத்திரிக்கு கூட காசு இல்லாமல் திண்டாடிக் கொண்டிருந்தார் கண்ணன். அந்த நேரத்தில் கதிர், தனம், முல்லை இவங்கதான் ஆஸ்பத்திரிக்கு வந்து ஐஸ்வர்யாவை கவனித்தார்கள். பின்பு எல்லா செலவையும் கதிர் தான் கட்டினார். சரி இனிமேலாவது ரெண்டு பேரும் திருந்துவார்கள் என்று பார்த்தால் இன்னும் ஐஸ்வர்யா நம்ம நிறைய வீடியோ எடுப்போம் என்று ஒவ்வொருத்தரையாய் எடுத்துக்கிட்டு அலப்பறை பண்ணிட்டு இருக்கா.

Also Read: விஜய் டிவியில் அவமானப்பட்ட கோபி.. இந்த காரணத்திற்காக தான் சீரியலில் இருந்து விலக நினைத்தார்

அடுத்ததாக ஐஸ்வர்யா, மட்டனை வாங்கிட்டு வா, மாத்திரை வாங்கிட்டு வா என்று கண்ணனை அனுப்பி வைக்கிறார். வெளியே என்ன நிலவரம் என்று கூட தெரியாமல் கண்ணன் ஒவ்வொரு பொருள்களையும் வாங்கும் போது பார்க்கவே கஷ்டமாகத்தான் இருக்கிறது. வேற வழி இல்லாம இருக்க காசுக்கு பணத்தையும், காய்கறியும் வாங்கிட்டு வீட்டுக்கு வருகிறான். அங்கே வந்து பார்த்தா அத்தாட்சி மற்றும் ஐஸ்வர்யாவும் அவனை நக்கலாக என்ன இப்படி வாங்கிட்டு வந்திருக்க. இது என்னத்துக்கு காணோம் உன்கிட்ட வேற காசே இல்லையான்னு சொல்லிட்டு நக்கலா பேசுகிறார்கள்.

சரி அப்பவாது உண்மையே சொல்லலாம் இந்த கண்ணன் பையன் அப்பவும் சொல்லாம திருத்திரு என்று முழிச்சிட்டு இருக்கான். இதற்கிடையில் கண்ணன் ரொம்ப நாளா ஆபீஸ்க்கு போகலையே எப்படி சமாளிக்க போகிறான் என்று இவர்களை நினைத்து தனம் அங்கே புலம்பி கொண்டிருக்கிறார். அடுத்தபடியாக ஜீவா, மாமனார் வீட்டில் இருந்து ஜனார்த்தனிடம் ஒவ்வொரு ஏச்சும் பேச்சும் வாங்குவதற்கு ஆரம்பித்து விட்டார். இப்படி ஆளுக்கு ஒரு திசையாக இந்த நாடகம் போவதை பார்க்கும் போது தான் கடுப்பாக இருக்கிறது.

Also Read: குணசேகரனின் சுயரூபத்தை தெரிந்து கொண்ட மக்கு ஆதிரை.. விசாலாட்சி எடுக்க போகும் முடிவு என்ன

- Advertisement -

Trending News