எல்லையே மீறிய கதிர்.. அவமானப்பட்ட ஞானம், சக்தியை காப்பாற்றிய கௌதம்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியல் அனைவரும் ஆவலாக எதிர்பார்த்த பரபரப்பை நோக்கி வருகின்றது. கதிர், அண்ணி என்று கூட நினைக்காமல் வாய்க்கு வந்தபடி ரொம்பவே தவறான வார்த்தைகளால் காயப்படுத்தி விடுகிறார். இதனால் நொந்து போன ரேணுகா வாயடைத்து நிற்கிறார். இவருக்கு சப்போட்டாக குணசேகரின் அம்மா வந்து கதிரை கண்டிக்கிறார். ஆனாலும் கதிர் எதற்கும் அடங்காமல் அநாகரிகமாக பேசுகிறார்.

இதற்கிடையில் அப்பத்தா கண்விழித்து ஜனனியை கூப்பிடுகிறார். பிறகு குணசேகரின் அம்மா மற்றும் ஆதிரை அப்பத்தாவிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு ஆசீர்வாதம் வாங்கிக் கொள்கிறார். அடுத்தபடியாக அப்பத்தா, ஜனனிடம் ஜீவானந்தத்தை பற்றி கேட்க அதற்கு எனக்கு எப்படி கண்டுபிடிப்பது என்று தெரியவில்லை. உங்க போன் இருந்தால் கூட எனக்கு கண்டுபிடிப்பதற்கு கொஞ்சம் ஈசியாக இருக்கும் என்று கேட்கிறார்.

Also read: கோபிக்கு இந்த அவமானம் தேவையா?. பாக்யாவிற்காக மகன்கள் கொடுத்த அடி

அதற்கு அப்பத்தா கல்யாண மண்டபம் என்று சொல்லி மறுபடியும் கோமா ஸ்டேஜ்க்கு போய் விடுகிறார். இந்த ஒரு துருப்புச் சீட்டை வைத்து தான் ஜனனி அப்பத்தா சொன்ன ஜீவானந்தத்தை கண்டுபிடிக்க வேண்டும். அடுத்ததாக கதிர் இப்படி பேசியதை நினைத்து ரேணுகா அவமானத்தில் கூனி குறுகி போய் இருக்க இவருக்கு ஆறுதலாக நந்தினி மற்றும் குணசேகரின் அம்மா பேசுகிறார்கள். இதற்கு உடனே ஜனனி எத்தனை நாள் தான் இப்படி அமைதியாக இருக்க என்று கேட்கிறார்.

அந்த நேரத்தில் ஞானம் வீட்டுக்குள் வர என்ன ஆச்சு ஏன் எல்லாரும் இப்படி இருக்கீங்க சொல்லுங்க என்று கேட்கிறார். உடனே நந்தினி அப்பா சொல்ல ஆரம்பிக்கிறார். ஆனால் குணசேகரன் அம்மா பாதியிலேயே நிறுத்தி விடுகிறார். அடுத்து நந்தினி நான் சொல்லுகிறேன் என்று நடந்த விஷயத்தை சொல்கிறார். இதைக் கேட்டு கோவப்பட்டு கதிரிடம் போய் ஞானம் கேட்க கடைசியில் இவருக்கு மிஞ்சியது அடியும் அவமானம் தான்.

Also read: உயிரைக் காப்பாற்றும் ராதிகா.. உருட்டுறதுக்கு கதையில்லாமல் சன் டிவியை பாலோ செய்யும் விஜய் டிவி

அடுத்ததாக சக்தி மற்றும் அருண் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக் கொண்டதால் இவரை காப்பாற்ற விதமாக கௌதம் வந்தார். கௌதமை பார்த்த சக்தி மனமாறி செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு இருவரும் நெருங்கி பேச ஆரம்பித்து விட்டார்கள். இந்த நேரத்தில் ஜனனி சக்திக்கு போன் பண்ணி குடும்பத்தில் நிறைய பிரச்சனைகள் நடக்கிறது நீ உடனே கிளம்பி வீட்டுக்கு வா என்று கூப்பிடுகிறார்.

சக்தி வந்தால் பிரச்சனை சரியாயிடுமா என்ன. ஜனனி அடுத்ததாக அப்பத்தா சொன்ன அந்த திருமண மண்டபத்தில் சிசிடிவி கேமரா அல்லது அங்கே போய் விசாரிக்க போகிறார். அங்கே கண்டிப்பாக இவருக்கு சாதகமாக அப்பத்தா போன் இவரிடம் கிடைக்கும். பிறகு அதில் இருக்கும் ஜீவானந்தம் நம்பரை வைத்து அவரை கண்டுபிடிப்பார். இதன் மூலம் தான் குணசேகரன் மற்றும் கதிர் கொட்டத்தை அடக்குவார்.

Also read: குணசேகரனை விட டபுள் மடங்கு மிஞ்சிய கதிர்.. திருப்பி அடிக்கும் ஜனனி

- Advertisement -