குணசேகரன் போட்ட பிளான் படி காய் நகர்த்திய கதிர்.. சோளக்காட்டு பொம்மையாக இருக்கும் சக்தியின் சகலை

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் ராமசாமி, சித்தார்த்தை காப்பாற்றிய பிறகு குணசேகரன் இடம் ஃபோன் பண்ணி சித்தார்த்தை கடத்தியது கதிர் மற்றும் சக்தி தான் என்று சொல்கிறார்.

உடனே குணசேகரன் அவருக்கு சாதகமாக ஒரு பிளானை போட்டு சக்தி மற்றும் கதிரை மாட்ட வைப்பதற்கு ராமசாமிக்கு ஐடியா கொடுக்கிறார்.

அதாவது அஞ்சனா மற்றும் ஜனனியின் அம்மாவை விட்டுவிடுங்கள். அதற்கு பதிலாக சித்தார்த்தை கடத்தி வைத்த வீடியோ கரிகாலன் கையில் இருப்பதால் அவனை வாக்குமூலம் கொடுக்க வைத்து அவன் கையில் இருக்கும் வீடியோ ஆதாரத்தை வைத்து சக்தி மற்றும் கதிரை போலீசில் சிக்க வைத்து விடலாம்.

அதன் பிறகு அவர்களை ஜாமினில் எடுப்பதற்கு இங்கு உள்ளவர்கள் அலையும் நேரத்தில் நம் அசால்ட்டாக சித்தார்த் மற்றும் தர்ஷினிக்கு கல்யாணத்தை பண்ணி வைத்துவிடலாம் என்று குணசேகரன் பிளான் போட்டு கொடுக்கிறார். அதன்படி ஒவ்வொரு காயாய் நகர்த்தி வரும் போது ராமசாமி காரில் இருந்த சித்தார்த்தை சக்தி பார்த்து விடுகிறார்.

அப்பொழுது கதிர் மற்றும் சக்தி, சித்தார்த்தை மறுபடியும் தூக்கி விடுகிறார்கள். இதனை தொடர்ந்து கதிர், ஜனனிக்கு போன் பண்ணி அஞ்சனாவை கோவிலுக்கு கூட்டிட்டு வந்து விடு. நானும் சித்தார்த்தை அங்கே கூட்டிட்டு வந்து விடுகிறேன். ரெண்டு பேருக்கும் அங்க வைத்து கல்யாணத்தை பண்ணி வைத்து விடலாம் என்று கதிர் பிளான் போட்டு கொடுத்து விடுகிறார்.

அம்மாஞ்சியாக இருக்கும் சித்தார்த்

அதன்படி ஜனனி, குணசேகரன் அசர்கிற நேரத்தில் அங்கே இருந்து அனைவரும் தப்பித்து கோவிலுக்கு போய் விடுகிறார்கள். இதற்கிடையில் குணசேகரனுக்கு சித்தார்த் மறுபடியும் காணவில்லை என்று தெரிந்ததும் கரிகாலனை வைத்து சக்தி மற்றும் கதிர் மீது கம்ப்ளைன்ட் கொடுத்து அவர்களை அரெஸ்ட் பண்ண சொல்லப் போகிறார்.

இப்படி இந்த தடங்கல்களை எல்லாம் தாண்டி எப்படி அஞ்சனாக்கும் சித்தார்த்துக்கும் கல்யாணம் நடக்கப் போகிறது. இதற்கிடையில் சித்தார்த், அஞ்சனாவை காதலித்திருந்தாலும் கல்யாணம் பண்ணுவதற்கு கொஞ்சம் கூட ஆர்வம் இல்லாமல் இருக்கிறார்.

அதுவும் அம்மாவின் கை பொம்மையாக இருந்து அனைத்தையும் வேடிக்கை மட்டும் பார்த்து வருகிறார். இப்படி இருக்கும் பொழுது எப்படி சக்தியின் சகலையாக மாறப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்