கைகலப்பில் ஈடுபட்ட கதிர்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் வெடிக்கும் அடுத்த பிரச்சனை

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தம்பதியர்களுக்காக நடக்கும் போட்டியில் 10 லட்சத்தை வெல்ல வேண்டும் என்பதற்காக கதிர், முல்லை இருவரும் அந்தப் போட்டியில் கலந்து கொள்கின்றனர். ஆனால் சமூக வலைதளங்களில் ஃபேமஸ் ஆக இருக்கும் ஜோடி ஒன்று கதிர்-முல்லை இருவரையும் தொடர்ந்து சீண்டி பார்க்கிறது.

அவர்கள் கதிர்-முல்லை இருவரையும் கணவன் மனைவியே இல்லை என்றும் கேலி கிண்டல் அடிக்கின்றனர். மேலும் முல்லையை வேறு ஒருவருடன் தொடர்புபடுத்தி பேசியதை கேட்டதும் கதிரால் தாங்க முடியாமல் கைகலப்பில் ஈடுபடுகிறார்.

Also Read: இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்ட கதிர்-முல்லை.. பாண்டியன் ஸ்டோரில் நடக்கும் அடுத்தடுத்து ட்விஸ்ட்

கதிரிடம் முகர குத்தும் வாங்கிய அந்த போட்டியாளர் எப்படியாவது கதிரின் கை காலை உடைத்து விட வேண்டும் என திட்டம் தீட்டுகிறார். ஆனால் போட்டி முடிந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்கின்றனர். இதை மறைந்திருந்து கேட்கும் முல்லை இதைப்பற்றி கதிரிடம் சொல்ல, கதிர் அவர்களிடம் மீண்டும் சண்டைக்கு நிற்கிறார்.

அதேசமயம் கதிர் முல்லை இருவரும் வருவார்கள் என பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமே பத்திரப்பதிவு அலுவலகத்தில் காத்திருக்கிறது. எனவே இந்த சமயம் குடும்பத்துடன் இருக்க விரும்பும் கதிர் எப்படியாவது போட்டியில் இருந்து வெளியேறிவிடலாம் என பார்க்கிறார்.

Also Read: ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த அந்த தருணம்.. களை கட்ட போகும் இன்றைய பிக்பாஸ் எபிசோட்

ஆனால் அவரால் உடனே இந்த போட்டியில் இருந்து வெளியேற முடியாமல் கடைசி சுற்றில் கலந்து கொள்ள வேண்டிய இக்கட்டானு சூழ்நிலையில் இருக்கிறார். ஆனால் இறுதி சுற்றில் முல்லை-கதிர் இருவருக்கும் இடையே இருக்கும் காதலால் அவர்கள் வெற்றி பெற்று 10 லட்சத்துடன் குடும்பத்தை சென்று பார்க்கின்றனர்.

இப்படி பிரச்சினைக்கு இடையில் கடைசியில் முல்லை 10 லட்சம் வெற்றி பெற்று குடும்பத்துடன் இணைந்து ஒரே வீட்டில் மீண்டும் வாழலாம் என்று  ஆசையுடன் குன்னக்குடி கிளம்புகின்றனர். ஆனால் பத்திரப்பதிவிற்கு வராததால் கதிரிடம் குடும்பமே கோபத்தை காட்டுகிறது. இருப்பினும் அவர்களது சூழ்நிலையை புரிய வைத்து பிறகு கதிர்-முல்லை இருவரும் குடும்பத்துடன் இணைகின்றனர்.

Also Read: சொந்த காசிலே சூனியம் வச்சிக்கிட்ட கோபி.. அனுபவி ராஜா அனுபவி

Stay Connected

1,170,265FansLike
132,060FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -