கதிர், குணசேகரன் சேர்ந்து போடும் டிராமா.. இது அத்தனையும் நடிப்பா கோபாலு, ஏமாந்துட்டியே நந்தினி

Kadhir and Gunasekaran Drama: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் பெண்களின் உரிமை, முன்னேற்றம் என்று கதையைக் கொண்டு வந்து மக்களை உற்சாகப்படுத்தியது. ஆனால் தற்போது வருகிற கதையை பார்த்தால் இதெல்லாம் சும்மா வாய் சவடால் தான் என்கிற மாதிரி பெண்களை வேலைக்காரியாகவும், அவர்கள் அனைவரும் சமையலுக்கு மட்டும் தான் லாய்க்கு என்பதற்கு ஏற்ப மட்டமான கதையை வைத்து உருட்டுகிறார்கள்.

இருந்தாலும் எப்பவாவது குணசேகரன் வீட்டில் உள்ள பெண்களுக்கு விடிவுகாலம் பிறக்கும் என்கிற நம்பிக்கையில் ஒரு சிலர் இந்த நாடகத்தை விடாமல் தொடர்ச்சியாக பார்த்து வருகிறார்கள். அந்த வகையில் குணசேகரனுக்கு எதிராக ஈஸ்வரி எலக்ஷனில் நின்னு தோற்கடிப்பதற்கு களம் இறங்கி இருக்கிறார். இவருக்கு சப்போர்ட்டாக ஜனனி, வாசுவும் ஒரு சில வேலைகளில் இறங்கி விட்டார்கள்.

ஆனாலும் இவர்களைவிட எந்த விதத்திலும் குறைஞ்சவங்க இல்லை என்பதற்கு ஏற்ப குணசேகரனும் அவருடைய பங்குக்கு பக்க அரசியல்வாதியாக மாறி ஒவ்வொரு வேலைகளையும் செய்து வருகிறார். இதற்கு இடையில் தற்போது ஒரு மிகப்பெரிய சந்தேகம் எழும்புகிறது. அதாவது கதிருக்கு அடிபட்டது என்னமோ உண்மைதான், ஆனால் இது எல்லாத்துக்கும் காரணம் குணசேகரன் தான் இருப்பாரோ என்கிற மாதிரி இருக்கிறது.

Also read: பணக்கார மருமகளுக்கு சேவகம் பார்க்கும் விஜயா.. வேலைக்காரியாக மாறிய மீனா, ரோகிணி எடுத்த முடிவு

அதாவது அனுதாப ஓட்டு வேணும், அதை வைத்து ஜெயித்து விடலாம் என்ற ஒரு நம்பிக்கையில் குணசேகரன் இந்த பிளானை செய்திருக்கலாம். இதற்கு ஒத்து ஊதும் விதமாக கதிரும் கூடவே இருந்து சரி என்று தலையாட்டி இருக்கலாம். ஆக மொத்தத்தில் கை காலில் பெருசாக அடி இல்லையோ, இதெல்லாம் கதிர் குணசேகரன் சேர்ந்து போடும் டிராமா மாதிரி தெரிகிறது.

அந்த வகையில் கதிர் நடிக்கிறார் என்று தெரியாமல் நந்தினி ஏமாறுகிறாரா என்பதும் கேள்விக்குறியாக இருக்கிறது. உண்மையில் அப்படி மட்டும் இருந்துச்சுன்னா இந்த நாடகத்தின் மேல் இருக்கிற கொஞ்சம் நெஞ்சம் மதிப்பும் இல்லாமல் போய்விடும். அத்துடன் இந்த நாடகமே இருக்கும் இடம் தெரியாமல் மக்கள் மனதில் போய்விடும்.

ஏனென்றால் இந்த ஒரு சான்ஸ்லையாவது கதிர், நந்தினியை புரிந்துகொண்டு திருந்துவதற்கு வாய்ப்பு வரும் என்று மக்கள் நம்பிக்கையுடன் பார்த்து வருகிறார்கள். அவர்களுடைய நம்பிக்கை மொத்தமாக சொதப்பும் விதமாக கதிர் நடிக்கிறார் என்று தெரிந்து விட்டால், இந்த நாடகத்தை பார்ப்பதையே நிறுத்தி விடுவார்கள். இன்னும் கொஞ்ச நாளில் என்னதான் நடக்க இருக்கிறது என்பது தெரிந்து விடும்.

Also read: நாளா பக்கமும் அடிவாங்கும் குணசேகரன்.. எதிரிக்கு எதிரி நண்பன் என்கிற முறையில் கூட்டு சேர்ந்த வில்லன்