வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

கதை இல்லாமல் மட்டமாக உருட்டும் ஜீ தமிழ் சீரியல்.. காரி துப்பும் கார்த்திகை தீபம்

பொதுவாக சீரியல்கள் என்றாலே எல்லா காட்சிகளும் மிகைப்படுத்தப்பட்ட தாக தான் இருக்கும். பெண்களை குறி வைத்து எடுக்கப்படுவதால் சீரியல்கள் எப்போதுமே எமோஷன்கள் அதிகம் இருப்பது போலவே காட்டப்படும். அதிலும் கடந்த சில வருடங்களாக சீரியல்களின் போக்கே மாறிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். இயல்பு தன்மை என்ற ஒன்று இல்லாமல் போய்விட்டது.

முன்பெல்லாம் சீரியல்களில் இருக்கும் பெண்களை பார்க்கும் பொழுது சாதாரண பெண்களை பார்ப்பது போல் இருக்கும். ஆனால் இப்போதெல்லாம் காலையில் எழுந்து வரும் காட்சியிலேயே முழுக்க மேக்கப் உடன் தான் இருக்கிறார்கள். இது சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் பயங்கரமாக ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. இதில் எப்பொழுதுமே விஜய் டிவி சீரியல் தான் சிக்கும். ஆனால் தற்போது சிக்கி இருப்பது ஜீ தமிழ் சீரியல்.

Also Read:டம்மி பீஸ் இடம் சத்தியம் வாங்கிய குணசேகரன்.. ஜனனியை விட ரேணுகா பரவாயில்லை

ஜீ தமிழில் கார்த்திகை தீபம் என்னும் சீரியல் கடந்த டிசம்பர் மாதம் முதல் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கிறது. இந்த சீரியலில் ஆபீஸ் மற்றும் செம்பருத்தி சீரியல் களின் கதாநாயகனாக நடித்த கார்த்திக் ராஜ் நடிக்கிறார். இவரை ஏற்கனவே நெட்டிசன்கள் பயங்கரமாக ட்ரோல் செய்து கிழித்து தொங்கவிட்டு இருக்கின்றனர். இந்நிலையில் கார்த்திகை தீபத்தில் இவர் நடித்த காட்சி ஒன்று தற்போது பயங்கர கேலிக்குள்ளாகி இருக்கிறது.

கார்த்திகை தீபம் சீரியலின் கதையை பார்த்தால் கொஞ்சம் அப்படியே பாரதி கண்ணம்மா சீரியலின் உல்டா தான். கருப்பாக இருக்கும் பெண் சமூகத்தில் நிறைய பிரச்சனைகளை சந்தித்தாலும் அவளுக்கு பாடல் பாடும் திறமை இருப்பதால் அதிகம் சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறாள். கார்த்திக் ராஜை திருமணம் செய்த பிறகு அவள் வாழ்க்கையே மாறுவதோடு, அவளுடைய லட்சியத்திலும் ஜெயிக்கிறாள் என்பதுதான் இந்த நாடகத்தின் கதை.

Also Read:சுவாரசியம் குறையும் எதிர்நீச்சல்.. குணசேகரன் காணாமல் போனதற்கு இதுதான் காரணம்

இதில் ஒரு காட்சியில் கார்த்திக் ராஜ் கோவிலில் வந்து நேர்த்திக்கடன் செய்யும் பொழுது குளத்தில் மஞ்சள் தாலியை மிதக்க விடுகிறார். அது சரியாக கதாநாயகி குளத்திலிருந்து குளித்துவிட்டு எழுந்திருக்கும் பொழுது அவள் கழுத்தில் மாட்டிக் கொள்வது போல் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த காட்சி பார்ப்பவர்கள் எல்லோரையும் மொத்தமாக முட்டாள் ஆக்கி இருக்கிறது தான் என்று சொல்ல வேண்டும்.

 

                                                                   கார்த்திகை தீபம் சீரியல் காட்சி

தண்ணீரில் மிதக்கும் தாலி சரியாக ஒருவரின் கழுத்தில் மாட்டுவது என்பதெல்லாம் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத காட்சி. ஆனால் இதற்குப் பிறகு இவர்கள் இருவருக்கும் காதல் மற்றும் திருமணம் என்பதெல்லாம் கொஞ்சம் ஓவராகவே இருக்கிறது. என்னதான் சீரியல். கற்பனை என்றாலும் பார்ப்பவர்களை இப்படியா முட்டாளாக்குவது என்று நெட்டிசன்கள் இந்த சீனை கலாய்த்து தள்ளிக் கொண்டிருக்கிறார்கள்.

Also Read:குணசேகரனை விட மட்டமாக இறங்கிய கதிர்.. சக்தியை மன்னித்த ஜனனி

- Advertisement -

Trending News