29 படங்கள் நடித்தும் மறு கூட்டணி அமைக்காத கார்த்தி.. பருத்திவீரன் இப்படிப்பட்ட நடிகரா

மெட்ராஸ், கொம்பன் படத்துக்குப் பிறகு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெரிய ஹிட் படங்கள் கார்த்தி கொடுக்கவில்லை. ஆனால் வருடத்திற்கு இரண்டு மூன்று படங்கள்இவருக்கு ரிலீசாகி கொண்டு தான் இருக்கிறது. வா வாத்தியார், மெய்யழகன்,  சர்தார் 2 என அடுத்தடுத்து லைன் அப்  வைத்திருக்கிறார்.

 இவர் தன்னுடைய கேரியரில் கிட்டத்தட்ட 29 படங்களில்  நடித்திருக்கிறார் ஆனால் ஒரு முறை கூட ஏற்கனவே படம் பண்ணிய இயக்குனர்களுடன் மறு கூட்டணி வைத்தது இல்லையாம். இதற்கு பல காரணங்கள் கூறுகிறார்கள். இவர் நடித்த இரண்டு சூப்பர் ஹிட் படங்களில் இரண்டாம் பாகம் வெளிவராமல் கிடக்கிறது.

 பெரிதும் மக்கள் எதிர்பார்த்து வரும் இரண்டு படங்கள்   ஐந்து வருடங்கள் ஆகியும் இழுவையில் இருக்கிறது. அந்த படங்களின்  இயக்குனர்கள் ரெடியாக இருந்தாலும் கார்த்தி அதற்கு  முட்டுக்கட்டை போட்டு வருகிறாராம்.  இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் ஜப்பான். அதுவும் படு மொக்கையாகி தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை விளைவித்தது 

பருத்திவீரன் இப்படிப்பட்ட நடிகரா

 கைதி மற்றும் தீரன் அதிகாரம் ஒன்று இந்த இரண்டு படங்களும் கார்த்திக்கு மாஸ் ஹிட் ஆனது. அதன் இரண்டாம் பாகம் பற்றி  அதன்  இயக்குனர்களும், கார்த்தியும் கொஞ்சம் கூட யோசிப்பதே இல்லையாம். கார்த்தி படம் நடிக்கும் போது    இயக்குனர்களுடன் பல முரண்பாடுகளை ஏற்படுத்திவிடுவாராம்.

அப்படித்தான் தீரன் அதிகாரம் ஒன்று பட இயக்குனர் எச் வினோத்திடம் இவருக்கு முரண்பாடு ஏற்பட்டுள்ளது. அந்த படத்தின் சூட்டிங் சமயத்தில் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு பேசிக்கவே இல்லையாம். படம் ரிலீஸ் ஆன பிறகும்  அந்த  மனக்கசப்பு பெரிய அளவில் மாறிவிட்டதாம். இன்று வரை இவர்கள் அதே ஈகோவில் தான் இருக்கிறார்களாம்.

 இப்படி கார்த்தி நடந்து  கொண்டதால் தான் அந்த இரண்டாம் பாகம் இன்னும் ஒரு பேச்சு வார்த்தைக்கு வரவில்லை. இதை போல் தான் எல்லா இயக்குனர்களிடமும் ஏதாவது முரண்பாடு  ஏற்பட்டு அந்தப் படத்தோடு நிறுத்தி விடுவாராம். அதனால் இன்று வரை இவர் ஒரே இயக்குனருடன் மறு கூட்டணி  அமைத்ததில்லையாம்.

Next Story

- Advertisement -