வருஷ கணக்கா காக்க வைத்து காலை வாரிய கார்த்தி.. உதயநிதியின் மொக்கை படத்தால் வந்த பரிதாப நிலை

Actor Karthi: தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக ரவுண்டு கட்டிக் கொண்டிருக்கும் கார்த்தி, தன்னுடைய ரசிகர்களுக்கு தீபாவளிக்கு ட்ரீட் கொடுக்கும் விதமாக அவருடைய ஜப்பான் படம் ரிலீஸ் ஆகிறது. சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி சோசியல் மீடியாவில் ட்ரெண்டானது.

இந்த நிலையில் பல வருஷங்களாக இயக்குனர் ஒருவரை காக்க வைத்து, இப்போது அந்த படத்தை கார்த்தி ட்ராப் செய்திருக்கிறார். இது கார்த்தியின் கேரக்டரே இல்லை என இந்த தகவலை அறிந்த பலரும் விமர்சிக்கின்றனர். இருப்பினும் உதயநிதியின் மொக்க படத்தால் தான் கார்த்தி இப்படி ஒரு முடிவை எடுக்க வேண்டியதாயிற்று.

Also Read: வித்தியாசமான நடிப்பால் ஆலமரம் போல் வளர்ந்த 5 நடிகர்கள்.. நம்ம திரையுலகத்தை திரும்பி பார்க்க வைத்த ஏஜென்ட் அமர்

கார்த்தி ஒரு இயக்குனரை வருட கணக்காக காக்க வைத்து கடைசியில் டிமிக்கி கொடுத்துள்ளார். எல்லாத்துக்கும் காரணம் உதயநிதி ஸ்டாலினின் அந்த படம் தான் என கூறுகிறார்கள். கார்த்தி நடிக்க அருண்ராஜா காமராஜ் இயக்க பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரு படம் டேக் ஆப் ஆக இருந்தது.

சவுத் ஆப்பிரிக்காவில் படத்தின் ஷூட்டிங்கை நடத்த திட்டமிட்டனர். இந்த படத்திற்கு இவர்தான் வில்லன் இவர்தான் ஹீரோயின் என்றெல்லாம் முடிவு செய்யப்பட்டது. படத்தின் முன் களப்பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில், விரைவில் படப்பிடிப்பு துவங்கும் என படக்குழுவினர் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.

Also Read: 2024 சூர்யாவின் அடுத்தடுத்து வெளிவர உள்ள 5 படங்கள்.. வாடி வாசலில் சீரும் காளையாய் சினம் கொண்ட ரோலக்ஸ்

ஆனால் அருண்ராஜா காமராஜ் அந்த படத்தை ஓரம் கட்டி விட்டு உதயநிதியின் படத்தின் படப்பிடிப்பில் தீவிரம் காட்டிக் கொண்டிருந்தார். சமீபத்தில் அருண் ராஜா காமராஜ் உதயநிதியை வைத்து நெஞ்சுக்கு நீதி என்ற படத்தை எடுத்தார். அந்த படம் சரியாக போகவில்லை. இந்த மொக்க படத்திற்காகவா என்னுடைய படத்தை தள்ளிப் போட்டீர்கள் என இந்த விஷயத்தை மனதில் வைத்துக்கொண்டு வருஷ கணக்கில் அருண்ராஜா காமராஜை பதிலுக்கு பதில் காக்க வைத்தார்.

இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என அருண்ராஜா காமராஜரும் கார்த்தியை சந்தித்து எப்போது படம் பண்ணலாம் என நெருக்கடி கொடுத்திருக்கிறார், அதன் பிறகு தான் கார்த்தி தனக்கு இந்த படத்தில் நடிக்க இஷ்டமில்லை என்று படத்தை டிராப் செய்துவிட்டார்.

Also Read: சிறுத்தை ராக்கெட் ராஜாவாக மாறிய கார்த்தி.. உண்மை சம்பவம், ஜப்பான் படத்தின் கதை இதுதான்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்