இந்த 5 நல்ல டைரக்டரை விட்டுட்டு ஜப்பான் மாதிரி படத்திற்கு ஓகே சொல்லிய கார்த்தி.. வாய்ப்பை நச்சுன்னு தூக்கிய நயன்

Actor Karthi: நடிகர் சிவகுமாரின் இரண்டு மகன்கள் ஆன கார்த்தி மற்றும் சூர்யா இருவரும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவேண்டும் என்று முட்டி மோதி கொண்டிருக்கின்றனர். இதில் சூர்யா சரியான ட்ராக்கில் சென்று கொண்டிருக்கிறார்.

ஆனால் கார்த்தி இந்த 5 நல்ல டைரக்டரை விட்டுட்டு ஜப்பான் மாதிரி படத்திற்கு ஓகே சொல்லி நடித்துக் கொண்டிருக்கிறார். கானா, நெஞ்சுக்கு நீதி போன்ற படங்களை எடுத்தவர் அருண்ராஜா காமராஜ். இவர் கார்த்தியிடம் சூப்பர் ஸ்டோரியை சொல்லி இருக்கிறார்.

ஆனால் கார்த்தி 2025 வரை நான் ரொம்ப பிஸின்னு சீன் போட்டு பில்டப் காட்டி இருக்கிறார். இப்பொழுது அருண்ராஜா காமராஜ் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவிற்கு ஒரு கதையை தயார் செய்து அவரிடம் சொல்லி ஓகே வாங்கி விட்டார். இந்த படம் பெண்களை மையப்படுத்திய கதை.

Also Read: சிவக்குமார் வில்லனாக நடித்த ஒரே படம்.. கமல் கைவிட்ட மோசமான கதாபாத்திரம்

வாய்ப்பைத் தட்டி தூக்கிய நயன்தாரா

ஆனா கார்த்தி அதை மிஸ் பண்ணிட்டார், நயன் அந்த வாய்ப்பை நச்சுனு தட்டி தூக்கி விட்டார். அருண்ராஜா காமராஜ் மட்டுமல்ல கார்த்திக் நரேன், விக்னேஷ் ராஜா, லிங்குசாமி, நலன் குமாரசாமி உள்ளிட்டரும் கார்த்தியிடம் கதை சொல்லி இருக்கின்றனர். ஆனா அவற்றையெல்லாம் ரிஜெக்ட் செய்துவிட்டார்.

சமீப காலமாகவே கார்த்தி நடிக்கக்கூடிய படங்களின் கதையை சரியாக தேர்வு செய்வதில்லை. ஜப்பான் படம் ஒரு திருடன் கதை, அந்தத் திருடனை ஹீரோவாக நினைக்கலாமா என்று இப்போது கார்த்தி ரசிகர்களை ஆதங்கப்படுகின்றனர். இதே நிலைமை நீடித்தால், கார்த்தி இருக்கிற இடம் தெரியாமல் சினிமாவில் காணா போய் விடுவார் என்றும் எச்சரிக்கின்றனர்.

Also Read: ஜெய் லைன் அப்பில் இருக்கும் 5 படங்கள்.. இதற்கெல்லாம் காரணம் புண்ணியவதி நயன்தாரா தான்