3-வது முறையாக சாதனை படைத்த கார்த்தி.. தொடர் விடுமுறையால் சக்கை போடு போட்ட வசூல்

முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி சங்கர் நடிப்பில் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியான விருமன் திரைப்படம் தற்போது வசூலில் சக்கை போடு போட்டு கொண்டிருக்கிறது. காதல், ஆக்சன், சென்டிமென்ட் என கிராமத்துக் கதைக்களத்துடன் வெளியான இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

விருமன் படம் வெளியான ஒரு வாரத்துக்கு உள்ளாகவே படக்குழு வெற்றி விழாவும் கொண்டாடி உள்ளனர். அதுமட்டுமல்லாமல் இந்த படத்தில் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் கதாநாயகியாக அறிமுகமானதால் ஏகப்பட்ட பிரமோஷன் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

Also Read: ஷங்கரின் வாரிசு என்பதால் அதிதிக்கு வாய்ப்பு கிடைக்கிறதா?

கடந்த மூன்று நாள் தொடர் விடுமுறை நாட்கள் என்பதால் விருமன் படத்தின் வசூல் தாறுமாறாக எகிறியது. விருமன் படம் ரிலீஸ் ஆன பத்தே நாட்களில் 50 கோடி வசூலை தட்டிச் சென்றுள்ளது. இந்த வசூல் சாதனையால் தற்போது படக்குழு சந்தோசத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

ஏற்கனவே  கார்த்தி நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான கடைக்குட்டி சிங்கம், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி போன்ற படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக விருமன் படமும் 50 கோடி வசூலைத் தாண்டி சாதனை படைத்திருக்கிறது.

Also Read: ஒரே சாயலில் இருக்கும் விருமன், திருச்சிற்றம்பலம்

இதேபோன்று விருமன் படத்திற்குப் போட்டியாக திரையரங்கில் கடந்த ஆகஸ்டு 18 ஆம் தேதி தனுஷின் திருச்சிற்றம்பலம் வெளியானது. இந்த படத்தில் நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராசி கன்னா ஆகியோர் நடித்துள்ளனர்.

திருச்சிற்றம்பலம் ரிலீசான 4 நாட்களில் உலக அளவில் 50 கோடிக்கு மேல் வசூல் வேட்டையாடி உள்ளது. இந்த இரண்டு படங்களும் ரசிகர்களின் மத்தியில் பாசிட்டிவ் கமெண்டுகள் எழுவதால் தொடர்ந்து திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் வந்து கொண்டிருக்கிறது.

Also Read: அதிதிக்கு அடிக்கும் அதிர்ஷ்டம்

- Advertisement -