சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

ஐஸ்வர்யாவுக்கு அடிமையாக மாறிய கண்ணன்.. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் அண்ணன் தம்பிகளுக்குள் விரிசல் வந்து நாலா பக்கமும் பிரிந்து இருக்கிறார்கள். தற்போது மூர்த்தியும் கதிர் மட்டும் ஒரே குடும்பமாக வாழ்கிறார்கள். ஆனால் கதிர் செய்ததை பார்க்கும் பொழுது இவர்களுக்கும் பிரச்சனை வெடிக்க வாய்ப்பு இருக்கிறது. அதாவது மூர்த்தி கடையில் கிடைத்த லாபத்தை தனத்திடம் கொடுக்கிறார். அப்பொழுது கதிர் என்னால் இப்பொழுது ஹோட்டல் பணத்தை கொடுக்க முடியாது என்று சொல்லி இருக்கிறார்.

அதற்கு மூர்த்தி அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லை. ஆனால் உனக்கு ஹோட்டல்ல ஏதும் நஷ்டமாக இருக்கிறதா என்று கேட்டதற்கு கதிர் அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை எனக்கு இந்த மாசம் கொஞ்சம் செலவு இருக்கிறது என்று ஏதோ சொல்லி சமாளித்து விட்டார். ஆனால் இவர் ஹோட்டலில் வந்த பணத்தை மொத்தத்தையும் ஐஸ்வர்யாவுக்கு ஹாஸ்பிடல் கட்டினது மட்டுமல்லாமல் கண்ணனின் கை செலவுக்கும் பணத்தை தாரவாத்து கொடுத்துவிட்டார்.

Also read: உயிரைக் காப்பாற்றும் ராதிகா.. உருட்டுறதுக்கு கதையில்லாமல் சன் டிவியை பாலோ செய்யும் விஜய் டிவி

ஆனா இந்த உண்மையை மூர்த்தியிடம் சொல்லி இருக்கலாம். அதற்கு பதிலாக அவரிடம் மறைப்பது எதுல போய் முடியுமோ தெரியவில்லை. இதற்கிடையில் கண்ணன், ஐஸ்வர்யாவிடம் மாட்டிக் கொண்டு ஒவ்வொரு நாளும் முழிக்கிறான். இப்போது ஐஸ்வர்யா அடுத்தடுத்து செய்யும் செல்களால் கடுப்பில் இருக்கிறான் கண்ணன்.

இதற்கு காரணம் ஐஸ்வர்யா, கண்ணனை ஒரு அடிமையாக நடத்துகிறார். அதுவும் ஒரு வேலைக்காரனை போல முதலில் தண்ணி எடுத்துட்டு வா, பிறகு மாத்திரை எடுத்துட்டு வா, அப்பறம் போனுக்கு சார்ஜ் போடு என இந்த மாதிரியான ஒவ்வொரு வேலைகளையும் சொல்லிக் கொண்டே இருக்கிறார். அடுத்ததாக கண்ணனிடம் ஐஸ்வர்யா நீ நாளைக்கு வேலைக்கு போறியா என்று கேட்கிறார்.

Also read: பிரம்மாண்டமாக நடந்த 8-வது விஜய் டிவி அவார்டு நிகழ்ச்சி.. ரெண்டு முறை விருதை தட்டிச் சென்ற ஒரே சீரியல்

அதற்கு கண்ணன் ஆமாம் போகணும் என்று சொல்ல, இதை கேட்டு ஐஸ்வர்யா நீ வேலைக்கு போனா நான் தனியாக இருக்கணும் ஒரு நாள் லீவ் போடுறியா என்று கேட்கிறார். உடனே கண்ணன் இதற்கு நம்ம பேசாம அண்ணன் வீட்டிலேயே இருந்திருக்கலாம். இப்படி தனியா வந்து கஷ்டப்பட வேண்டிய அவசியமே இல்லை என்று சொன்னதற்கு ஐஸ்வர்யா அவனை திட்டி விடுகிறாள்.

இப்பொழுது கண்ணனை பார்க்கும் பொழுது இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா அனுபவி ராஜா என்று சொல்லும் அளவிற்கு குளு குளு என்று இருக்கிறது. இதற்கு பிறகாவது கண்ணன் திருந்தி ஒழுங்கா அண்ணனிடம் மன்னிப்பு கேட்டு ஒற்றுமையாக இருந்தால் தான் ஐஸ்வர்யா ஆட்டம் குறையும். இல்லையென்றால் இப்படித்தான் ஓவராக செய்வார்.

Also read: குணசேகரனை ஓவர்டேக் செய்யும் ஜனனி.. ரேணுகா கதிருக்கு கொடுத்த பதிலடி

- Advertisement -

Trending News