பாரதியை ரவுண்டு கட்டி அடித்த கண்ணம்மா.. இப்படியா ஒரு மனுஷன அசிங்கப்படுத்துறது

விஜய் டிவியின் பாரதிகண்ணம்மா சீரியலில் மனைவி கண்ணம்மாவின் மீது இருக்கும் சந்தேகத்தினால், பத்து வருடங்களாக மனைவியை விட்டு பிரிந்து வாழும் கணவர் பாரதி, தற்போது தன்னிடம் வளர்ந்த ஹேமா கண்ணம்மாவின் குழந்தை என்ற உண்மையை தெரிந்து கொண்டார்.

இதைத் தாங்கிக் கொள்ள முடியாத பாரதி, ஹேமாவை தன்னிடமிருந்து கண்ணம்மா பிரித்து விடுவாரா என எண்ணுகிறார். அதுமட்டுமின்றி லட்சுமியிடம் கண்ணம்மா, பாரதி தான் உன்னுடைய அப்பா என்ற உண்மையை கூறி இருக்கிறார் என்பதையும் பாரதி தெரிந்துகொண்டார்.

இதனால் ஆத்திரமடைந்த பாரதி, கண்ணம்மாவை மருத்துவமனையில் வைத்து அசிங்கப்படுத்திகிறார். அதைத் தாங்கிக் கொள்ளாத கண்ணம்மா பாரதியை அவருடைய சொந்த மருத்துவமனையில் வைத்து டாக்டர் என்று கூட பார்க்காமல் கண்டபடி திட்டி அசிங்கப் படுத்துகிறார்.

‘தன்னுடைய மகள் ஹேமா, தந்தையான பாரதியிடம் இருப்பது எனக்கு சந்தோஷம் தான். ஆனால் ஹேமாவை என்னிடம் இருந்து பிரிக்க நினைத்தால் கோர்ட்டு வரை சென்று அவள் என்னுடைய மகள் தான் என்பதை நிரூபித்து, அவளை உங்களிடமிருந்து பிரித்து என்னுடன் அழைத்து வந்து விடுவேன்’ என கண்ணம்மா பாரதியை ஹாஸ்பிட்டலில் வைத்து ரவுண்டு கட்டி அடிக்கிறார்.

இதையெல்லாம் கேட்டு ஆடிப்போன பாரதி, உயிருக்கு உயிராக வளர்த்த ஹேமாவை தன்னிடமிருந்து கண்ணம்மா பிடித்து விடுவாரோ என்று அமைதியாக சென்று விடுகிறார். இவ்வளவு நாள் பாரதி தரக்குறைவாக பேசினாலும் அமைதியாக சென்ற கண்ணம்மா தற்போது பொங்கி எழுகிறார்.

இதுதான் சீரியல் ரசிகர்களும் விரும்புவதால் அதை புரிந்துகொண்ட சீரியலின் இயக்குனர் டிஆர்பியை ஏற்றுவதற்காக கண்ணம்மாவின் வாயைப் பிடுங்கி விட்டுள்ளனர். இனி பாரதிகண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவின் ஆட்டம் தான் அதிகமாக இருக்கப்போகிறது.

- Advertisement -