2 பட வாய்ப்புகளை தவற விட்ட கண்ணம்மா.. ரெண்டுமே மரண ஹிட் படம் ஆச்சே!

விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியலான பாரதிகண்ணம்மா சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் தனது கச்சிதமான நடிப்பை வெளிக்காட்டிய ரோஷினி திடீரென்று அந்த சீரியலில் இருந்து விலகினார். அதன் பிறகு தற்போது கண்ணம்மாவாக டிக் டாக் பிரபலம் வினுஷா தேவி நடித்துக்கொண்டிருக்கிறார்.

மேலும் சினிமாவில் கிடைத்த பட வாய்ப்பின் காரணமாகவே பாரதிகண்ணம்மா சீரியலில் இருந்து விலகப்போவதாக ரோஷினி காரணம் தெரிவித்தார். ஆனால் தற்போது கிடைத்த தகவலின்படி ரோஷினி இரண்டு சூப்பர் ஹிட் படங்களில் கிடைத்த பட வாய்ப்புகளைத் தவற விட்டுள்ளார்.

சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் படத்தில் முக்கிய கதாபாத்திரமாக கருதப்படும் செங்கேணி கேரக்டருக்கு முதல் முதலாக ரோஷினி நான் தேர்வாய் உள்ளாராம். இதில் மட்டும் ரோஷினி நடித்திருந்தால் அவருடைய வாழ்க்கையில் பெரிய திருப்புமுனையை ஏற்பட்டிருக்கும்.

அத்துடன் சினிமாவிலும் நல்ல வளர்ச்சி கிடைத்திருக்கும். அதேபோல் ஆர்யா நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் கொடுத்த படமான சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் ஆர்யாவின் மனைவி மாரியம்மாள் கதாபாத்திரத்திற்கு முதல் முதலாக தேர்வானவர் ரோஷினி தானாம்.

ஆனால் இந்தப்படத்திலும் ரோஷினி நடிக்காமல் கிடைத்த வாய்ப்பை தவிர வைத்துள்ளார். மேலும் செங்கேணி மற்றும் மாரியம்மாள் கதாபாத்திரம் நிச்சயம் ரோஷினிக்கு கச்சிதமாக பொருந்திருக்கும்.

சின்னத்திரையில் இருந்து வெளியேறிய ரோஷினி சினிமாவில் ஒரு கலக்கு கலக்குவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், கிடைத்த வாய்ப்பை ரோஷினி தவற விட்டு விட்டுள்ளதை அறிந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்