சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

ஆண்கள் போல் முடி வெட்டி கெட்டப்பை மாற்றிய கனிகா.. க்யூட் பாய் என கொஞ்சும் ரசிகர்கள்

தமிழில் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் தல அஜித் ஜோடியாக வரலாறு என்ற படத்தில் நடித்தவர்தான் கனிகா. மலையாள நடிகையான இவர் தமிழ் சினிமாவிலும் பெயர் சொல்லும் நாயகியாக வலம் வந்தார்.

வரலாறு படத்திற்கு முன்பு பைவ் ஸ்டார், ஆட்டோகிராப், எதிரி போன்ற படங்களில் நடித்திருந்தாலும் அஜித்துடன் நடித்த பிறகுதான் இவருக்கு ஒரு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இருந்தாலும் அதன் பிறகு தமிழ் சினிமாவில் நடிக்காமல் தொடர்ந்து மலையாளம் சினிமாவிலேயே பலகாலம் தன்னுடைய சினிமா வாழ்க்கையை கழித்தார். சமீபத்தில் வெளிவந்த ஓகே கண்மணி படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

திருமணம் செய்து கொண்டு ஒரு மகனுக்கு தாய் ஆன பிறகு மீண்டும் சினிமாவில் ஆர்வம் கொண்டு சமீப காலமாக சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதில் நடிகை கனிகா நீச்சல் உடையுடன் புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார்.

அதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்து பல லைக்குகளை குவித்தது. தற்போது விஜய்சேதுபதியுடன் யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்திலும், விக்ரமுடன் கோப்ரா படத்திலும் நடித்து வருகிறார்.

மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுப்பதில் ஆர்வமாக இருக்கும் கனிகா வித்தியாசமான கதாபாத்திரங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாராம். அப்படி ஒரு படத்திற்காக ஆண் போல் முடி வெட்டியுள்ள புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

kanika-cinemapettai
kanika-cinemapettai
- Advertisement -

Trending News