தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் நடிகர் தான் தல அஜித். தல அஜித்தின் அடுத்த படமான வலிமை விரைவில் வெளியாக உள்ளது.
ஒரு கட்டத்தில் தொடர் தோல்விகளைக் கொடுத்துக் கொண்டிருந்த அஜித்தின் சினிமா கேரியரை மாற்றிய திரைப்படங்களில் கேஎஸ் ரவிக்குமார் இயக்கிய வரலாறு படத்திற்கு மிகப் பெரிய பங்கு உண்டு.
3 கதாபாத்திரங்களில் பட்டையைக் கிளப்பிய அஜீத்தின் வரலாறு படம் என்றும் தல ரசிகர்களுக்கு ஃபேவரிட் தான். அதிலும் அவர் திருநங்கை கலந்த ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதற்காக அஜித் எடுத்த ரிஸ்க் அனைவரையும் மிரள வைத்தது.
பல நடிகர்கள் நடிக்க தயங்கும் அந்த கதாபாத்திரத்தில் தைரியமாக முதலில் நடித்தவர் அஜித் தான். அதன் பிறகுதான் காஞ்சனா படத்தில் சரத்குமார் நடித்தார். இந்நிலையில் அஜித்தின் வரலாறு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் தான் கனிகா.
இவர் பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். கேரள வரவாக தமிழ் சினிமாவில் அறிமுகமான கனிகா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக மாறுவதற்குள் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். தற்போது அவருக்கு ஒரு மகன் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மீண்டும் சினிமாவில் செகண்ட் இன்னிங்சை தொடங்கியுள்ள கனிகா தொடர்ந்து தனக்கு வரும் பட வாய்ப்புகளை தக்கவைத்துக்கொள்ள தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெறும் பனியனில் வேஷ்டி கட்டிக்கொண்டு பட்டையை கிளப்பும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.