புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

1000 கோடிக்கு அடி போடும் ராஜமௌலி ஹீரோ.. தல தப்புமா என்ற பயத்தில் இருக்கும் கங்குவா டீம்

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் கங்குவா மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. 3டி தொழில்நுட்பத்துடன் 10 மொழிகளில் உருவாகும் இப்படம் கிட்டத்தட்ட 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்படுவது தான் இதற்கு முக்கிய காரணம். அதேபோன்று இப்படத்திற்கான சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் ரைட்ஸ் வியாபாரமும் வியக்க வைக்கும் வகையில் இருக்கிறது.

அப்படி இருந்தும் கூட கங்குவா இப்போது பிரபாஸின் ஆதிபுருஷ் படத்தை பார்த்து கொஞ்சம் பீதியில் இருக்கிறதாம். ஏனென்றால் ராமாயண கதைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படமும் 3டி தொழில்நுட்பத்துடன் தான் உருவாகி இருக்கிறது. மேலும் 5 மொழிகளில் வெளியாக உள்ள இப்படம் வரும் ஜூன் 16 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

Also read: 3டி தொழில்நுட்பத்தில் உருவான 5 தமிழ் படங்கள்.. அடுத்தடுத்து களமிறங்கும் சூர்யா , சிவகார்த்திகேயன்

அதைத்தொடர்ந்து இப்போது படத்திற்கான பிரமோஷன் வேலைகளும் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பலரையும் மிரட்டிய நிலையில் படத்தின் முதல் வார வசூலே இந்திய அளவில் சாதனை படைக்கும் என கருத்துக் கணிப்புகள் வெளிவந்துள்ளது.

அதாவது 700 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள ஆதிபுருஷ் முதல் வாரத்திலேயே 1000 கோடியை தாண்டி விடும் என கூறப்படுகிறது. ஏனென்றால் ராஜமௌலியின் பாகுபலி திரைப்படத்தின் மூலம் உலக அளவில் கவனம் பெற்ற பிரபாஸ் இப்போது பாக்ஸ் ஆபிஸ் ஹீரோவாகவும் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

Also read: அவன் இவன் படத்தில் நடிக்க இருந்த அண்ணன், தம்பி நடிகர்கள்.. பாலா சூழ்ச்சி தெரியாமல் காத்து கிடந்த சோகம்

ஆனால் கடைசியாக அவர் நடிப்பில் வெளிவந்த சாகோ, ராதே ஷ்யாம் ஆகிய படங்கள் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. அது மட்டுமின்றி விமர்சன ரீதியாகவும் சில சறுக்கல்களை சந்தித்தது. அதனாலேயே பிரபாஸ் ஆதிபுருஷ் படத்திற்காக தன் ஒட்டுமொத்த உழைப்பையும் கொட்டி இருக்கிறார். அதைத்தொடர்ந்து படமும் எதிர்பார்த்ததை விட நன்றாகவே வந்திருக்கிறதாம்.

இதை வைத்து தான் பட குழு இத்தனை கோடி வசூலை எதிர் பார்த்து வருகின்றனர். மேலும் இத்துடன் கங்குவா படமும் ஒப்பிட்டு பார்க்கப்பட்டு வருகிறது. அதனாலேயே அந்த டீம் தல தப்புமா என்ற பயத்தில் இருக்கின்றனர். அந்த வகையில் இப்படம் பாகுபலி நாயகனுக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்குமா அல்லது சொதப்பி விடுமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Also read: தனக்கு வந்தா ரத்தம், மத்தவங்களுக்கு வந்த தக்காளி சட்னியா.. கங்குவா படப்பிடிப்பில் சூர்யா செய்யும் அலப்பறை

- Advertisement -

Trending News