தமிழ் சினிமாவில் ஏராளமான நடிகர்கள் சினிமாவில் உச்சத்தில் உள்ளனர். ஆனால் ஒரு சில நடிகர்கள் தற்போது வரை சினிமாவில் வெற்றி பெறுவதற்கு போராடி வருகின்றனர். அதிலும் ஒரு சில நடிகர்களின் நிலைமை அதோ கதி என்று தான் கூற வேண்டும். அந்த அளவிற்கு வாழ்க்கையில் பல பிரச்சினைகளை சந்தித்துள்ளனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியல் 90 கிட்ஸ் களுக்கு மிகவும் பிடித்த சீரியல் என்று தான் கூற வேண்டும். அந்த அளவிற்கு இந்த சீரியலுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இந்த சீரியலில் நடித்த ஒவ்வொரு நடிகருக்கும், ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது. அதனால் சில நடிகர்களுக்கு படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.
அதனை சரியாக பயன்படுத்தி சில படங்களில் நடித்து வருகின்றனர். கனா காணும் காலங்கள் சீரியலில் புலி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ராகவேந்திரன். இவர் காமெடியாக நடித்த காட்சிகள் கனாக்காணும் காலங்களில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.
சமீபத்திய பேட்டியில் இவர் சினிமாவில் நடிப்பதற்காக 10 வருடங்களுக்கு மேலாகியும் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என கூறியுள்ளார். மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் காற்றுக்கென்ன வேலி சீரியலில் எனும் சீரியல்தான் நடித்து வருவதாக கூறினார். 12 நாட்கள் படப்பிடிப்பு நடக்கும். ஆனால் சிறிய நடிகர்கள் நடித்த ஒரே ஒரு காட்சி மட்டும் தான் ஒளிபரப்பப்படும் என கூறியுள்ளார்.
மேலும் பிச்சைக்காரன் விட சினிமாவில் உதவி இயக்குனராக இருப்பவர்களுக்கும், சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடிப்பவர்களுக்கும் வாழ்க்கையில் கஷ்டம் அனுபவிப்பதாக தெரிவித்துள்ளார். சினிமாவின் ஆரம்பத்தில் நடிப்பவர்களுக்கு பெரிய அளவில் சம்பளம் கொடுக்கப் படுவதில்லை எனவும் இதனால் அவர்களது குடும்பத்தை கூட அவர்களால் பார்த்துக் கொள்ள முடியவில்லை என கூறினார்.
இனிமேல் நான் நடிக்கப் போவதில்லை எனவும் இது வரைக்கும் தன்னால் தன்னுடைய குடும்பம் அனுபவித்த வேதனைகள் போதும் எனத் தெரிவித்துள்ளார். மேலும் இனிமேல் மாத சம்பளத்திற்கு வேலைக்கு சென்று தனது குடும்பத்தை காப்பாற்ற போவதாக தெரிவித்துள்ளார்.
