8 வருடம் கழித்து மீண்டும் துவங்க உள்ள கனா காணும் காலங்கள்.. ஆனா விஜய் டிவியில் கிடையாது!

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் சீரியலான கனா காணும் காலங்கள் என்ற தொடர், தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் பள்ளி மற்றும் கல்லூரி பருவத்தில் மையமாக கொண்டு எடுக்கப்பட்டு மிகப் பெரிய வெற்றியைக் கண்ட தொடர். ஆகையால் கனா காணும் காலங்கள் முதல் மற்றும் இரண்டாம் சீசனை தொடர்ந்து, கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை மற்றும் கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை போன்ற பெயர்களில் 4 சீசன்கள் வரிசையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இந்த 4 சீசன்களில் நடித்த இளம் நடிகர், நடிகைகள் எல்லாம் தற்போது சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை கலக்கிக் கொண்டிருக்கின்றனர். எனவே 8 வருடம் கழித்து மீண்டும் கனா காணும் காலங்கள் துவங்கப்பட உள்ளது.

இதில் கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதையில் வெற்றி கதாபாத்திரத்தில் நடித்த பிரேம்குமார் முக்கியமான கேரக்டரில் நடிக்க உள்ளார். அத்துடன் ஏற்கனவே மற்ற சீசன்களில் நடித்த ஒரு சில நடிகர் நடிகைகளும் புதிதாக துவங்கப்பட உள்ள கனா காணும் காலங்கள் சீரியலில் நடிக்க உள்ளனர்.

எனவே இதற்கான படப்பிடிப்பு தற்போது துவங்கப்பட்டுள்ளது. ஆகையால் படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாக்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் புதிதாக உருவாக்கப்படும் கனா காணும் காலங்கள் என்ற சீரியலின் அடுத்த சீசன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் மட்டும் ஒளிபரப்பாக உள்ளது.

kana-cinemapettai
kana-cinemapettai

சமீபத்தில் விஜய் டிவியில் கனா காணும் காலங்கள் நான்கு சீசனிலும் நடித்த பிரபலங்கள் சேர்ந்து கொண்டாடிய நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

அதன் காரணமாகவே நீண்ட நாட்களாக ரசிகர்களின் காத்திருந்த கனா காணும் காலங்கள் சீரியல் உருவாக்கும் முயற்சியில் சீரியல் குழுவினர் முற்பட்ட தற்போது அதற்கான வேலையை செய்துள்ளனர். எனவே கூடிய விரைவில் இந்த சீரியல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது.