கமல் நிலைமை தான் விக்ரமுக்கும்.. ரிலீசுக்கு முன்பே அந்த படத்திற்கு வந்த மோசமான விமர்சனங்கள்

கமல் மற்றும் விக்ரம் இருவருமே நடிப்புக்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவர்கள். இவர்களைப் பார்த்து நடிப்பு கற்றுக் கொள்ள வேண்டும் என பல பேர் ஆசைப்பட்டுள்ளனர். இந்நிலையில் கமல், விக்ரம் இருவருமே தற்போது வருடத்திற்கு ஒரு படம் மட்டுமே நடித்து வருகிறார்கள்.

விக்ரம் நடிப்பில் கடந்த சில வருடங்களாக வெளியான படங்கள் பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை. ஆகையால் தொடர்ந்து தோல்வி படங்களையே விக்ரம் கொடுத்து வருகிறார். இப்போது பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருடைய தோற்றமே வித்தியாசமாக உள்ளது.

Also Read : தடுமாற வைத்து வேடிக்கை பார்த்த அம்மையார்.. சூடு பிடிக்க களமிறங்கிய கமல்

இந்நிலையில் ஒரு காலத்தில் கமல் சந்தித்த பிரச்சனையை தற்போது விக்ரம் சந்திக்க உள்ளார். 1986 ஆம் ஆண்டு ஸ்ரீதர் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான திரைப்படம் நானும் ஒரு தொழிலாளி. இந்த படத்தில் ஜெய்சங்கர், அம்பிகா போன்ற பிரபலங்களும் நடித்திருந்தனர். நானும் ஒரு தொழிலாளி படம் ஏதோ ஒரு காரணத்தினால் நான்கு வருடங்கள் படப்பிடிப்பு தள்ளிப்போனது.

அதன் பின்பு ஒரு வழியாக படப்பிடிப்பு நடத்தி படத்தையும் ரிலீஸ் செய்துவிட்டார்கள். ஆனால் படத்தில் கமல் சில காட்சிகளில் ஒல்லியாகவும், சில காட்சிகளில் பருமனாகவும் தெரிந்தார். ஹேர் ஸ்டைல் போன்ற சில விஷயங்களும் மாறுபட்டு காணப்பட்டது. இதனால் அந்த படம் தோல்வியை தழுவியது.

Also Read : புலிக்கு வாலாக இருப்பதை விட பூனைக்கு தலையாக இருக்கலாம்.. கமல் கூப்பிடும் வர மறுத்த ஜாம்பவான்

இப்போது இதே போல் கடந்த 2018 இல் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் துருவ நட்சத்திரம் என்ற படத்தில் நடிக்க ஆரம்பித்தார். அதன் பின்பு பாதியிலேயே இந்த படம் தடைப்பட்டது. இப்போது மீண்டும் துருவ நட்சத்திரம் படத்தின் சூட்டிங் நடந்து வருகிறதாம்.

கிட்டத்தட்ட நான்கு வருடத்திற்கு முன்பு சினிமாவில் உள்ள ட்ரெண்ட் மாறிவிட்டது. இப்போது துருவ நட்சத்திரம் படம் வெளியானால் ரசிகர்களிடம் வெற்றி பெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆகையால் இந்த படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே நெகட்டிவ் விமர்சனங்களை ரசிகர்களிடம் பெற்று வருகிறது.

Also Read : அம்மாவின் இறுதி சடங்கில் கொந்தளித்த கமல்.. நட்பை விட்டுக் கொடுக்காமல் செய்த தரமான சம்பவம்

Next Story

- Advertisement -