ஆடு ஜீவிதம் படத்துக்கு கமல் கொடுத்த விமர்சனம்.. பாராட்டு மழை பொழிந்த மணிரத்தினம்

Kamal and Manirathinam: ப்ளெஸி இயக்கத்தில் பிரித்விராஜ் நடிப்பில் கடந்த இரு தினங்களுக்கு முன் ஆடு ஜீவிதம் படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளிவந்தது. வந்து இரு தினங்களிலேயே படம் பட்டைய கிளப்பி வசூல் அளவிலும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்று வருகிறது.

அந்த வகையில் கிட்டத்தட்ட 17 கோடியில் எடுக்கப்பட்ட படம் தற்போது வரை 80 கோடி வசூலை பெற்றிருக்கிறது. இப்படத்தின் கதை ஆனது ஒரு நிஜ வாழ்க்கையை மையப்படுத்தி காட்டப்பட்டிருக்கிறது. அதாவது 90ஸ் காலத்தில் பிழைப்பை தேடிக்கொண்டு இந்தியாவில் இருந்து சவுதி அரேபியாவுக்கு சென்ற மக்கள் கொத்தடிமையாக வாழ்ந்ததை காட்டப்பட்டு இருக்கிறது.

இதில் பிரித்விராஜ், நஜிப் முகமதுவாக பிழைப்புக்காக சவுதி அரேபியா போயிருக்கிறார். போன இடத்தில் இவரை கொத்தடிமையாக ஆக்கப்பட்டதை தொடர்ந்து படும் கஷ்டங்களையும் துயரங்களையும் படமாக்கப்பட்டு இருக்கிறது. பிறகு இதில் எப்படி மீண்டு வருகிறார் என்பது மீதமுள்ள கதை.

அந்த வகையில் பிரிதிவிராஜ் நடிப்பு ரியல் ஆகவும் பார்க்க வியப்பை ஏற்படுத்தும் அளவிற்கு எதார்த்தமான நடிப்பை கொடுத்திருக்கிறார். முக்கியமாக இப்படத்தின் காட்சிகள் அனைத்தையும் எடுப்பதற்கு சவுதி அரேபியாவில் அனுமதி வழங்கப்படவில்லை.

நம்பிக்கையை கொடுத்த மணிரத்தினம்

அதனால் இந்தியாவிலேயே அதே மாதிரி செட்டுகளை போட்டு 50 ஒட்டகங்களையும் 250 செம்மறி ஆடுகளையும் சொந்தமாக பிரித்விராஜ் வாங்கி படபிடிப்புக்கு ஏற்பாடு பண்ணி இருக்கிறார். இவ்ளோ மெனக்கெடு செய்த பிரித்விராஜுக்கும் இப்படத்தை கச்சிதமாக கொடுத்த இயக்குனரையும் பாராட்டும் வகையில் கமல் விமர்சனம் கொடுத்திருக்கிறார்.

அதாவது இப்படத்தின் கதையை பிரீமியம் சோவில் கமல் பார்த்திருக்கிறார். பார்த்தவுடன் இது அப்படியே மருதநாயகம் சாயலில் இருக்கிறது என்று சொல்லி அனைவரையும் பாராட்டி இருக்கிறார். இவரைத் தொடர்ந்து இயக்குனர் மணிரத்தினமும் கதையை பார்த்த பிறகு கண்டிப்பாக இப்படம் நேஷனல் விருதை வாங்கும் என்று நம்பிக்கை கொடுத்திருக்கிறார். அந்த அளவிற்கு ஆடு ஜீவிதம் படத்திற்கு பாராட்டு மழை பொழிந்திருக்கிறார்.

Next Story

- Advertisement -