ஆக்கிரமிக்கப்படும் கமலின் இடம்.. விரைவில் எடுக்கப்படும் நடவடிக்கை

கமல் நடிப்பில் தற்போது விக்ரம் திரைப்படம் நல்ல வசூலை பெற்று வருகிறது. அந்த வகையில் பல வருடங்களுக்குப் பிறகு கமலின் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் இந்த திரைப்படம் எதிர்பார்க்காத அளவிற்கு பல சாதனைகளை புரிந்துள்ளது.

இதனால் கமல் தற்போது மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார். இந்நிலையில் அவருக்கு அதிர்ச்சி தரும் விதமாக ஒரு விஷயம் நடந்துள்ளது. அதாவது சென்னை போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்காக மெட்ரோ ரயில் சேவை இன்னும் சிறிது விரிவுபடுத்த இருக்கிறது.

அதனால் சென்னையில் மெட்ரோ ரயில் சம்பந்தப்பட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் அடிப்படையில் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை கிட்டத்தட்ட 30 மெட்ரோ ஸ்டேஷன்கள் அமைக்கப்பட இருக்கின்றன. அதற்காக சுரங்கம் மற்றும் உயர்மட்ட வழி என இரண்டு விதமாக ரயில் நிலையங்கள் அமைக்கப்பட இருக்கிறது.

அந்த வகையில் ஆழ்வார்பேட்டை அருகில் பாரதிதாசன் ரயில் நிலையம் அமைக்கப்பட இருக்கிறது. இதற்காக கமல்ஹாசனுக்கு சொந்தமாக இருக்கும் இடத்தின் ஒரு சிறு பகுதியை ஆக்கிரமிப்பு செய்ய இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே கோயம்பேடு பகுதியில் மேம்பாலம் பணிகள் நடைபெற்ற போது அங்கு இருந்த கேப்டன் விஜயகாந்தின் திருமண மண்டபத்தின் சிறு பகுதி இடிக்கப்பட்டது. அப்போது இந்த விவகாரம் மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அந்த வகையில் தற்போது கமல்ஹாசனுக்கு சொந்தமான இடம் மெட்ரோ ரயிலுக்காக கையகப்படுத்த இருக்கும் இந்த செய்தி திரையுலகில் சிறு அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. பல கோடி செலவில் செயல்படுத்தப்படும் இந்த மெட்ரோ ரயில் தடம் சம்பந்தப்பட்ட பணிகள் விரைவில் முடிப்பதற்காக மெட்ரோ நிர்வாகம் தற்போது அதிக தீவிரம் காட்டி வருவது குறிப்பிடப்பட்டது.

Next Story

- Advertisement -