ரீ-ரிலீசுக்கு காத்திருந்த கமலின் பிளாப் படம்.. தயாரிப்பாளரை மொக்கைப்படுத்திய தியேட்டர் முதலாளிகள்

பொதுவாக நடிகர்களின் பிறந்தநாளின் போது அவர்கள் நடித்த சூப்பர்ஹிட் படங்களை ரீ ரிலீஸ் செய்து திரையரங்குகளில் வெளியிடுவார்கள். அதிலும் முக்கியமாக ரஜினிகாந்தின் பிறந்தநாள் டிசம்பர் 12 ஆம் தேதி வருவதையொட்டி வருடந்தோறும் பல திரையரங்குகளில் அவரது சூப்பர்ஹிட் திரைப்படங்களை வெளியிட்டு கொண்டாடுவார்கள்.

ஆனால் இந்த கொண்டாட்டம் உலகநாயகன் கமலஹாசனின் பிறந்தநாளின் போது நம்மால் பார்க்க முடியாது. என்னதான் ரஜினியும், கமலும் ஒன்றாக ஹீரோவாக அறிமுகமாகி திரையில் தோன்றினாலும் அன்றிலிருந்து இன்றுவரை ரஜினியின் திரைப்படங்களுக்கே மவுசு அதிகமாக இருக்கும். கமலஹாசனின் படங்களில் பொதுவாக சர்ச்சைக்குரிய கருத்துக்கள், அதிக முத்தக்காட்சிகள் இருப்பதால் அவரது பெரும்பாலான படங்கள் திரையரங்குகளில் ஓடாது.

Also Read: பிளேபாய் அவதாரம் எடுத்த சிம்பு.. உலக நாயகன் கமலஹாசன் கொடுத்த ஐடியா

அப்படி கமலின் நடிப்பில் உருவாகி பெருந்தோல்வி அடைந்த படத்தை நான்கு மாதங்களுக்கு முன்பு பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு ரீ ரிலீஸ் செய்ய நினைத்த நிலையில், தற்போது கைவிடப்பட்டுள்ளது. 2001 ஆம் ஆண்டு இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான ஆளவந்தான் திரைப்படம் கமலஹாசனின் கேரியருக்கே பெருந்தோல்வியாக அமைந்தது.

சைக்கோ த்ரில்லர் படமாக உருவாக்கப்பட்ட இப்படத்தில் கடவுள் பாதி, மிருகம் பாதி என கலந்து செய்த கலவையாக இருவேட கதாபாத்திரத்தில் கமலஹாசன் நடித்திருப்பார். நந்து கதாபாத்திரத்தில் வரும் கமலஹாசன் பெண்களை வெறுக்கும் மன நோயாளியாகவும், அண்ணன் கமலஹாசன் , தன் மனைவியை கொலை செய்ய நினைக்கும் சகோதரனை தடுக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

Also Read: ரஜினி பார்த்து மிரண்டு போன நடிப்பு அரக்கன் கமலஹாசன்.. அந்த மாதிரி 2 படங்களுக்கு இன்றுவரை ஏங்கும் ரஜினி

ஷங்கர் மகாதேவன் இசையமைத்த இத்திரைப்படத்தை 25 கோடி ரூபாய் அளவில் பெரும் பட்ஜெட்டில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்தார். ஆனால் இத்திரைப்படம் வெளியாகி பெருந்தோல்வியை அடைந்த நிலையில், கலைப்புலி எஸ்.தாணு கடனிலும் மூழ்கினார். இதனிடையே கடந்தாண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான விக்ரம் திரைப்படம் கமலஹாசனுக்கு நல்ல மார்க்கெட்டை கொடுத்த நிலையில், மீண்டும் ஆளவந்தான் படத்தை ரீ ரிலீஸ் செய்து கல்லாக்கட்ட கலைப்புலி எஸ்.தாணு முயற்சி செய்தார்.

மேலும் இப்படத்தை 3டி தொழில் நுட்பத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்த நிலையில், இப்படத்தை திரையரங்குகளில் ஓடவிட முடியாது என திரையரங்கு விநியோகஸ்தர்கள் மொக்கைப்படுத்தியுள்ளனர். மேலும் கமல் படம் வியாபாரம் ஆகாது என கூறியதால், இப்படத்தை ரீ ரிலீஸ் செய்யும் முயற்சியில் இருந்து கலைப்புலி எஸ்.தாணு கைவிட்டுள்ளார்.

Also Read:சிலம்பரசனை தயாரிக்கும் கமலஹாசன்.. வெற்றி இயக்குனரை தட்டி தூக்கிய உலக நாயகன்