நீ பிக்பாஸுக்கு தேவையில்லாத ஆணி.. பூமர் அங்கிளை கிழித்து தோரணம் கட்டிய கமல்

Biggboss 7: நேற்றைய பிக்பாஸ் எபிசோட் கொஞ்சம் சுவாரஸ்யமாக இருந்தது. ஆனாலும் கமல் வழக்கம் போல சில விஷயங்களில் பாராபட்சம் காட்டினார். இருப்பினும் சில அதிரடி விஷயங்களை செய்த ஆண்டவரை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

அந்த வகையில் இந்த வாரம் பூமர் கேங் அவரிடம் வசமாக சிக்கி இருக்கிறது. எப்போதுமே மாயா, பூர்ணிமா கேங் தான் வார இறுதி நிகழ்ச்சியை ஆக்கிரமிப்பார்கள். ஆனால் இந்த வாரம் மணி, அர்ச்சனா, தினேஷ், விஷ்ணு, கூல் சுரேஷ் ஆகியோருக்கான நாளாக அமைந்திருக்கிறது.

அதன்படி நேற்று மணி, தினேஷ் இருவரையும் ஆண்டவர் லெப்ட் அண்ட் ரைட் வாங்கினார். அதேபோன்று அர்ச்சனாவின் தவறுகளையும் சுட்டிக்காட்டினார். அதை தொடர்ந்து இன்று கூல் சுரேஷ், விஷ்ணு ஆகியோர் சிக்கி இருக்கின்றனர்.

Also read: சீசனே முடிய போகுது என்டர்டைன்மென்ட் எங்கைய்யா.. கோமாவிலருந்து முழித்த ஆண்டவரின் அட்ராசிட்டி

அந்த வகையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் விஷ்ணுவின் கேப்டன்சியை பற்றி கமல் கேட்கிறார். இதற்காகவே காத்திருந்த ஹவுஸ் மேட்ஸ் இவரெல்லாம் ஒரு தலைவனே இல்லை என போட்டுக் கொடுக்கின்றனர்.

ஏனென்றால் இந்த வாரம் விஷ்ணு தான் கேப்டன் என்பதற்கான அறிகுறி எங்கும் தென்படவில்லை. அந்த அளவுக்கு இந்த ஓட்ட வாய் நாராயணன் அவர் உலகத்தில் இருந்தார். அதை குறிப்பிட்டுள்ள கமல் பாராபட்சத்தோடு நடப்பது கேப்டன்சிக்கு அழகல்ல.

Also read: கமல் போதைக்கு ஊறுகாயான நிக்சன்.. பக்கா அரசியல் கேம் ஆடிய நார்த் ஆண்டவர்

பொறுப்பில்லாதவங்களா ஷாப்பிங் அனுப்ப கூடாதுன்னு சொன்னீங்க. நியாயப்படி நீங்கதான் அங்க போய் இருக்கணும் என குட்டு வைக்கிறார். இதனால் விஷ்ணுவின் முகம் பேய் அறைந்தது போல் மாறுகிறது. இந்த ப்ரோமோ தற்போது நிகழ்ச்சிக்கான எதிர்பார்ப்பை கொடுத்துள்ளது.