கமல் போதைக்கு ஊறுகாயான நிக்சன்.. பக்கா அரசியல் கேம் ஆடிய நார்த் ஆண்டவர்

Kamal’s Political Game: ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக தான் பிக்பாஸ் மக்களிடையே அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் கமல் அரசியலுக்கு வந்ததிலிருந்து அந்த மேடை அதுக்கான களமாக மாறிவிட்டது. அதிலும் இந்த சீசனை பற்றி சொல்லவே வேண்டாம்.

தேர்தல் நெருங்கி வருவதால் மொத்த ஓட்டுகளையும் கவர் செய்வதற்காக ஆண்டவர் ரொம்பவும் பாராபட்சமாக நடந்து வருகிறார். ஏற்கனவே இது பற்றிய கருத்துக்கள் தீயாக பரவிக் கொண்டிருக்கிறது. அதை நேற்றைய எபிசோடில் நாம் கண்கூடாகவே பார்க்க நேர்ந்தது.

அந்த வகையில் வடசென்னை ஓட்டை பிடிக்க ஆண்டவர் நேற்று செமையான ஒரு கேம் ஆடினார். அந்த போதைக்கு நிக்சன் ஊறுகாயாக மாறியதுதான் கொடுமை. சொருகிடுவேன் என்ற பிரச்சனையை கையில் எடுத்த ஆண்டவர் மணி, தினேஷ் கூறிய வார்த்தைகளை அப்படியே உல்டாவாக மாற்றினார்.

Also read: நிக்சனுக்கு எதிராக அர்ச்சனா கையில் எடுத்த ஆயுதம்.. குள்ளநரித்தனத்தை தோலுரித்த ஆண்டவர்

நீங்க எப்படி வடசென்னை மக்களை பற்றி பிராண்ட் பண்ணலாம். இன்னொரு வாட்டி இப்படி இருந்தா ரெட் கார்ட் கொடுப்பேன் என்ற அளவுக்கு அவர் வெளுத்து வாங்கினார். அதைப் பார்த்து நாங்க அப்படி ஒன்னும் தவறான நோக்கத்தில் சொல்லலையே என மணி, தினேஷ் இருவரும் மண்டை காய்ந்து நின்று கொண்டிருந்தார்கள்.

ஏற்கனவே விசித்ரா இப்படி ஒரு வார்த்தையை நிக்சனை பார்த்து கூறியிருக்கிறார். அப்போதெல்லாம் கேட்காத ஆண்டவர் திடீரென ஞானோதயம் வந்து பேசி இருக்கிறார். அதை பார்க்கும் போதே இது அரசியல் விளையாட்டு என்று பக்காவாக தெரிகிறது.

அதிலும் நீதி நியாயம் என்று பேசும் ஆழ்வார்பேட்டை ஆண்டவர் இப்போது அதை காப்பாற்ற தவறி வருகிறார். தன்னுடைய அரசியலுக்கு எது சரியோ அதையே பேசி மக்களின் வெறுப்பையும் எதிர்ப்பையும் சம்பாதித்து வருகிறார். இதனால் அவருக்கு ஒரு ஓட்டு கூட விழப்போவதில்லை என்பதுதான் உண்மை.

Also read: சீசனே முடிய போகுது என்டர்டைன்மென்ட் எங்கைய்யா.. கோமாவிலருந்து முழித்த ஆண்டவரின் அட்ராசிட்டி