வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

நேருக்கு நேர் சந்திக்கப் போகும் கமல், விஜய்.. குருவுக்காக லோகேஷ் செய்ய இருக்கும் சம்பவம்

குறுகிய காலத்திலேயே ஒருவரால் இந்த அளவுக்கு வளர்ச்சி அடைய முடியுமா என்ற ஆச்சரியத்தை உருவாக்கி இருக்கிறார் லோகேஷ். தற்போது விஜய்யை வைத்து லியோ திரைப்படத்தை இயக்கி வரும் அவர் LCU என்ற ஒரு கான்செப்ட்டை வைத்து அனைவரையும் மிரட்டிக் கொண்டிருக்கிறார். இதைத்தான் தற்போது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில் லியோ திரைப்படத்தில் கமல் இருக்கிறாரா, இல்லையா என்ற கேள்வி அனைவருக்கும் இருக்கிறது. அப்படியே இருந்தாலும் விஜய்யுடன் அவருக்கான காட்சிகள் எப்படி இருக்கும் என்ற விவாதம் தான் இப்போது காரசாரமாக நடந்து கொண்டிருக்கிறது. ஏனென்றால் லோகேஷ் நாம் ஒன்று நினைத்தால் அதைவிட 100 மடங்கு ட்விஸ்ட் வைத்து படத்தை கொடுக்கக் கூடியவர்.

Also read: டபுள் ஹீரோயின் படத்தில் நடிக்கும் லவ் டுடே பிரதீப்.. சிவகார்த்திகேயன், விஜய் நடிகைகளுக்காக பிடித்த அடம்

இதுவே அவருடைய வெற்றிக்கு காரணமாகவும் இருக்கிறது. அந்த வகையில் இந்த திரைப்படத்தில் கமலின் காட்சி இறுதியில் தான் வரும் என்றும் விஜய்யுடன் அவர் ஒரே நேர் கோட்டில் பயணிப்பார் என்றும் கூறப்படுகிறது. அப்படி பார்த்தால் இவர்களுக்கான பொதுவான எதிரி மெயின் வில்லனாகத்தான் இருக்கும். அது சஞ்சய் தத்தா அல்லது ரோலக்ஸா என்பதுதான் பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது.

ஆனால் இவர்கள் இருவரும் இணைந்து வில்லத்தனம் செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. மேலும் கமலின் தீவிர பக்தனான லோகேஷ் லியோ படத்தில் அவரின் என்ட்ரியை மிகவும் மாசாக கொடுக்க திட்டமிட்டிருக்கிறாராம். எப்படி என்றால் விக்ரம் திரைப்படத்தில் கடைசி சில நிமிடங்கள் மட்டுமே வந்த ரோலக்ஸ் ஒட்டுமொத்த படத்தையும் ஆக்கிரமித்தார்.

Also read: மாநகரம் முதல் லியோ வரை லோகேஷ் வாங்கிய சம்பளம்.. 6 வருடத்தில் மலைக்க வைக்கும் அசுர வளர்ச்சி

அப்படி ஒரு என்ட்ரியை தான் கமல் கொடுக்க இருக்கிறாராம். இது நிச்சயம் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மீறியதாக இருக்கும். அது மட்டுமல்லாமல் விஜய், கமல் இருவருக்கும் இடையே இருக்கும் காட்சிகளும் அதிரி புதிரி சரவெடியாக இருக்குமாம். இப்படி ஒரு விஷயம் தான் மீடியாக்களில் ஆர்வத்துடன் விவாதிக்கப்படுகிறது. பல சினிமா விமர்சகர்களும் இதையே ஆமோதிக்கின்றனர்.

அந்த வகையில் லியோ இப்படி ஒரு கான்செப்ட் அடிப்படையில் தான் உருவாகி கொண்டிருக்கிறது. ஏற்கனவே இப்படத்தில் ஏராளமான நட்சத்திரக் கூட்டங்கள் நடித்து வருகின்றனர். போதாத குறைக்கு புதுப்புது நடிகர்களையும் லோகேஷ் களமிறக்கிக் கொண்டிருக்கிறார். இதில் முந்தைய படங்களின் கேரக்டர்களும் இணைவது ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டி இருக்கிறது.

Also read: நாங்க கொடுக்கிற காசு, புகழ் மட்டும் வேணுமா? விஜய்யை கிழித்து தொங்கவிடும் மீடியா

- Advertisement -

Trending News