உலகநாயகன் கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் பல புதுமைகளை அறிமுகப்படுத்தியவர். அதன் மூலம் நம் திரையுலகை வேறு ஒரு இடத்திற்கு கொண்டு சென்ற பெருமையும் அவருக்கு இருக்கிறது. எல்லா நாட்டினரும் தமிழ் சினிமாவை தூக்கி வைத்து கொண்டாடும் அளவிற்கு வளர்த்து விட்டவரும் அவர்தான்.
புதுப்புது டெக்னாலஜிகள், வித்தியாசமான உருவ மாற்றங்கள் கற்பனையிலும் நாம் எதிர்பார்க்காத பல விஷயங்கள் என அனைத்திலும் ஜொலிக்க கூடிய ஒரே நடிகர் கமல்ஹாசன் மட்டும் தான். அப்படிப்பட்ட மனிதரை இப்போது ஒட்டுமொத்த திரையுலகமும் தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறது.
இதற்கு காரணம் சமீபத்தில் அவர் நடிப்பில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் தான். பொதுவாக தமிழ் சினிமாவில் பிரம்மாண்டமான படங்கள், ஹாலிவுட்டுக்கு நிகரான படங்கள் எதுவும் இல்லை என்ற பேச்சுக்கள் நிலவி வந்தது. ஆனால் அவற்றையெல்லாம் தகர்த்தெறியும் விதமாக கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் பலரையும் கவர்ந்துள்ளது.
சொல்லப்போனால் மற்ற மொழி திரைப்படங்களை காட்டிலும் விக்ரம் திரைப்படம் பல சாதனைகளை புரிந்துள்ளது. இதன் மூலம் தமிழ் சினிமாவை பலரும் வியப்புடன் பார்த்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் கமல் மட்டும்தான் என்பது மறுக்க முடியாதது.
இன்று அவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் திரையுலகம் சில வருடங்களுக்கு முன்பு அவருக்கு எதிராகவும் திரும்பியது. கமல் விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிட முயன்ற போது அவருக்கு ஏராளமான பிரச்சனைகள் ஏற்பட்டது. அப்போது அவர் தமிழ் படங்களை டிடிஎச்சில் தான் வெளியிட முடியும், விஸ்வரூபம் படத்தையும் அப்படித்தான் வெளியிட வேண்டும் என்று கருத்து தெரிவித்தார்.
இதனால் அப்போது ஒட்டுமொத்த திரையுலகமே அவருக்கு எதிராக பொங்கி எழுந்தது. மேலும் அவர் மீது உச்சகட்ட கோபத்தில் பல விமர்சனங்களும் எழுந்தது. ஆனால் கமல் அதையெல்லாம் தாண்டி அவருடைய விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிட்டார்.
அதைத்தொடர்ந்து அவர் சினிமாவில் நடித்து வந்தாலும், அரசியல் பணியின் காரணமாக சில வருடங்கள் நடிப்பிலிருந்து பிரேக் எடுத்தார். அதன் பிறகு நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு தற்போது ஒரு தரமான வெற்றியை அவர் ருசித்து வருகிறார். அப்போது அவருக்கு எதிராக இருந்த திரையுலகம் இப்போது அவரை தமிழ் சினிமாவை வேறு கட்டத்திற்கு எடுத்து சென்று விட்டார் என்றெல்லாம் புகழ் பாடி வருகிறது.