கமல்ஹாசனுடன் தனி ப்ளைட்டில் விக்ரம் பட சூட்டிங்கிற்கு கிளம்பிய லோகேஷ்.. இணையத்தை கலக்கும் புகைப்படம்

மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தை இயக்க உள்ளார் லோகேஷ் கனகராஜ். ஏப்ரல் மாதத்திற்கு முன்னரே இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைய வேண்டியது.

ஆனால் கமலஹாசன் தொடர்ந்து தேர்தலில் பிஸியாக வலம் வந்ததால் விக்ரம் படத்தின் படப்பிடிப்புகள் தொடர்ந்து தள்ளி வைக்கப்பட்டது. இதற்கிடையில் லோகேஷ் கனகராஜ் விஜய் சேதுபதியை வைத்து தனியாக ஒரு படத்தை இயக்குவதாகவும் செய்திகள் வெளியாகின.

அதைவிட ஒரு வாரத்திற்கு முன்பு லோகேஷ் கனகராஜ் மற்றும் பிரபாஸ் கூட்டணியில் ஒரு படம் உருவாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் அதெல்லாம் இப்போதைக்கு இல்லை என்பதை லோகேஷ் கனகராஜ் கமலஹாசனுடன் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உறுதிப்படுத்திவிட்டார்.

கமல் மற்றும் லோகேஷ் இணைந்து உருவாக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்புகள் இன்றிலிருந்து தொடங்குவதாக அந்த புகைப்படத்தில் தெரிவித்துள்ளார். மேலும் இருவரும் ஒரு தனி விமானத்தில் படப்பிடிப்புக்கு சென்றுள்ளனர்.

முதலில் கமல்ஹாசனுக்கு வில்லனாக ராகவா லாரன்ஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானது, ஆனால் படப்பிடிப்பு தள்ளி கொண்டே சென்றதால் ராகவா லாரன்ஸ் விக்ரம் படத்தில் இருந்து விலகியுள்ளாராம்.

அதனைத் தொடர்ந்து தற்போது மலையாள சினிமாவில் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் பகத் பாசில் கமலஹாசனுக்கு வில்லனாக விக்ரம் படத்தில் நடிக்க உள்ளதாக சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இரட்டிப்பாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

kamal-lokesh-vikram
kamal-lokesh-vikram

Next Story

- Advertisement -