வடிவேலுக்கும், பிரம்மானந்தாக்கும் கமல் வைத்த செல்ல பெயர்.. வயிறு வலிக்க சிரித்த உலக நாயகன்

Kamal Kept The Pet Name Two Comedy Actors: இன்றைய காலகட்டத்தில் நகைச்சுவைக்கும், காமெடி நடிகர்களுக்கும் மிகப்பெரிய பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என்றே சொல்லலாம். எத்தனையோ புதுப்புது காமெடி நடிகர்கள் வந்தாலும் அவர்களால் தொடர்ந்து நிலைத்து நிற்க முடியாமல் போய்விடுகிறார்கள். அந்த வகையில் தற்போது மிகப்பெரிய ஆறுதலாக இருப்பது காலத்திலும் அழிக்க முடியாத வடிவேலுவின் நகைச்சுவை தான்.

இப்பொழுது மட்டுமல்லாமல் எப்போதுமே இவருடைய காமெடிகள் நின்னு பேசும் அளவிற்கு தோற்றத்தையும், கிண்டலையும் தாறுமாறாக காட்டியிருப்பார். இவரைப் பற்றி என்னதான் நெகடிவ் விமர்சனங்கள் வந்தாலும் காமெடியில் இவரை அடிச்சுக்க வேற யாருமே கிடையாது என்ற சொல்லும் அளவிற்கு தனக்கான அங்கீகாரத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டார்.

Also read: மாமன்னனுக்கு முன்னரே வடிவேலு சம்பவம் செய்த 5 படங்கள்.. நாசரிடம் கருப்பட்டியாக வாங்கிய அடி

அப்படிப்பட்ட இவருடைய காமெடி பலரின் சோகங்களை மறைத்திருக்கிறது. இப்படி இவர் சினிமாவில் சாதித்த விஷயங்கள் எக்கச்சக்கமாக இருக்கிறது சொல்லிக் கொண்டே போகலாம். முக்கியமாக பல பிரபலங்களும் இவருடைய காமெடிக்கு அடிமையாக இருக்கிறார்கள். அதில் உலக நாயகன் கமல்ஹாசனும் ஒருவர். அதாவது வடிவேலு நடித்த ஒரு படத்தை பார்த்துவிட்டு கமல் விழுந்து விழுந்து வயிறு வலிக்க சிரித்திருக்கிறார்.

அத்துடன் இப்படி எல்லாம் கூட காமெடி செய்ய முடியுமா என்று வியப்பாக பார்த்திருக்கிறார். வடிவேலு நடித்த இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தில் மன்னராக வடிவேலு அடித்த லூட்டியை மிகவும் ரசித்துப் பார்த்திருக்கிறார். முக்கியமாக போர் நடந்துகிட்டு இருக்கும்போது சாவித் துவாரத்தை சுற்றி வடிவேலு விளையாடி இருப்பார்.

Also read: 52 வயதில் உடன்பிறந்த தம்பி மரணம்.. கோடிக்கணக்கில் சொத்து இருந்தும் உதவாத வடிவேலு

இதை பார்ப்பதற்கு அச்சு அசலாக சார்லி சாப்ளினை நினைவு படுத்துகிறது என்று கூறியிருக்கிறார். அத்துடன் வடிவேலுவை பாராட்டி அவருக்கு சார்லி சாப்ளின் என்ற செல்ல பெயரையும் வைத்திருக்கிறார். இவரை போல இன்னொரு காமெடி நடிகருக்கும் கமல் செல்ல பெயர் வைத்திருக்கிறார்.

அந்த காமெடி நடிகர் யார் என்றால் பிரம்மானந்தம். இவர் தெலுங்கு படங்களில் காமெடியனாக நடித்து வருகிறார். கிட்டத்தட்ட 1000க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பல உயரிய விருதுகளை பெற்றிருக்கிறார். இவர் தமிழில் மொழி, தானா சேர்ந்த கூட்டம், நாயகி, கில்லி போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். அப்படிப்பட்ட இவருடைய காமெடியை பார்ப்பதற்கு ஹாலிவுட் காமெடியன் மில் ப்ரோக்சையே ஞாபகப்படுத்துவது போல் இருக்கிறது என்று உலகநாயகன் கூறியிருக்கிறார்.

Also read: மாமன்னன் வெற்றியால் வடிவேலு போட்ட மாஸ்டர் பிளான்.. ஒரு படத்திற்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?

- Advertisement -